போடுங்க ஓட்டு, வைக்காதீங்க வேட்டு!

ள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டி.ராஜேந்தர் அறிவிக்கப் போகும் தேர்தல் வாக்குறுதிகளும், தேர்தல் திட்டங்களும். கேளு தங்கச்சி... கேளு!

குடும்பத்தில் தங்கச்சிகளைக் கொண்ட அண்ணன்கள் அனைவருக்கும் அரசு சார்பில் மாதாந்திர உதவித்தொகை வழங்க வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

காதலில் தோற்று தாடி வளர்ப்பவர்களுக்காக அதைப் பராமரிப்பதற்கு அரசு மானியம் வழங்கப் பரிந்துரைக்கப்படும். அவர்களுக்கான கவுன்சிலிங் மையங்கள் தொடங்கவும் கோரிக்கை வைக்கப்படும்.

ஊரில் உள்ள அனைத்து சலூன் கடைகளும் ஒழிக்கப்பட்டு, செல்ஃப் ஷேவிங் செய்பவர்களைக் கண்காணிக்க சிறப்புப் புலனாய்வுத் துறை நிறுவப்படும்.

எல்லாத் திரைப்படங்களிலும் அடுக்குமொழி வசனங்கள் வைக்க வேண்டும் எனக் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்படும்.

தங்கச்சி சென்டிமென்ட்டில் எடுக்கப்படும் படங்களுக்குக் கூடுதல் வரிவிலக்கு பெற்றுத் தருவதற்காக சென்சார் போர்டில் சென்டிமென்ட் சீன்களைக் கணக்கெடுக்க தனி டிவிஷன் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

‘தலைவரும் ஒருவரே தொண்டரும் ஒருவரே’ என்னும் திட்டத்தை விளக்கி ஊர் ஊராகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்