போஸ்டர் ஃபீவர்!

குழந்தை பிறந்ததில் இருந்து வயசாகி டிக்கெட் வாங்குறது வரைக்கும் எல்லாத்துக்கும் போஸ்டர் அடிச்சு, ஃப்ளெக்ஸ் வைக்கிறது தமிழ்நாட்டின் கலாசாரமாகவே மாறிடுச்சு. சில நேரங்களில் எதுக்கான போஸ்டர் இதுனு கண்டுபிடிக்கறதே பெரிய சவாலா இருக்கும். 14 பேர் கொடூரமா முறைச்சிக்கிட்டு போஸ் தர்ற போஸ்டர்ல ஒரு ஓரமா இருக்கிறதுதான் மணமக்கள்னு கண்டுபிடிக்க பத்து நிமிசமாவது ஆகும்.தன்னடக்கமா போஸ்டர்ல போட்ட ‘வாழ்த்த வயதில்லை’ வார்த்தைகளுக்கு இப்போ அர்த்தமே மாறிடுச்சு. பத்திரிகையில் ஒரு ஓரமா குட்டீஸ்னு போட வேண்டிய பொடிப்பசங்களுக்கு ப்ரொமோஷன் கொடுத்து போஸ்டர்ல வாழ்த்து தெரிவிச்சு நிற்க வெச்சுட்டாங்க. ‘எங்கள பகைச்சா எமனுக்கும் சங்குதான்’. இந்த பன்ச்சுக்கு கீழே இருக்கிறது யாருனு பார்த்தா, ஸ்கூல் போற பொடிப்பசங்க. ‘ஒரு டம்ளர் தண்ணி ஊத்தினா முங்கிருவ. நீ பொங்குறியா’னு கவுண்டமணி வாய்ஸ் கன்னாபின்னான்னு கேட்குது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்