இதெல்லாம் ரொம்ப ஓவர்!

500 ரூபாய் சம்பளம் கொடுத்தா, 5,000 ரூபாய்க்கு நடிக்கிற 'ஓவர் ஆக்டிங்' காட்சிகள் எல்லாம் சினிமாவில் மட்டுமில்லை, நிஜ வாழ்க்கையிலும் நடக்கும். சில இடங்களில் கை கொடுக்கிற, பல இடங்களில் கையைக் கடிக்கிற அந்த ஓவர் ஆக்டிங் அட்ராசிட்டிகளைக் கொஞ்சம் ஸ்க்ரோல் பண்ணுங்களேன்!

பாட்டிகள்னாலே பாவம்தான் பாஸ். ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்னு போற இடமெல்லாம் செத்துப்போன பாட்டியைக் கூட்டிக்கிட்டுப்போய், ‘பாட்டி இறந்துட்டாங்க'னு லீவு கேட்கிற யுக்திகூட பரவாயில்லை. ஆனா, ‘சின்னவயசுல இருந்தே தூக்கி வளர்த்தவங்க'னு கண்ணைக் கசக்குறது, ‘போனவாரம்கூட நல்லாப் பேசுனாங்க சார்'னு ஃபீலிங் காட்டுறதெல்லாம் என்னன்னு நினைக்கிறீங்க? அத்தனையும் நடிப்பு கோபால், நடிப்பு!

சரக்கு அடிச்சாச்சு; வீட்டுக்கும் வந்தாச்சு. கழுதை, ‘சரக்கு அடிச்சேன்'னு உண்மையைச் சொல்லி அடிவாங்கிட்டுப் போக வேண்டியதுதானே? வர்ற வழியிலேயே கொய்யா இலையை மேயறது, மென்டோஸைப் போட்டுக்கிட்டு வாயைக் கொப்பளிக்கிறது, ஜண்டுபாமை நக்கிச் சமாளிக்கிறதுனு ஆயிரம் வழிகளைக் கண்டுபிடிச்சுக் கரையேறினாலும், வீட்டுக்குள்ள போகும்போது நீங்க நடக்கிற  'அட்டேன்ஷன்' பொசிஷனும், என்னைக்குமே கொஞ்சாத குழந்தையோட கன்னத்தைக் கிள்ளி  'ஜூஜூஜூ'னு சிரிக்கிறதுமா ஓவர் ஆக்டிங் கொடுத்தா உடலுக்குக் கேடு!

பிடிச்சுப் பண்றதுதானே காதல். அப்புறமும் ஆயிரத்தெட்டு தடவை ‘என்னைப் பிடிக்குமா, என்னைப் பிடிக்குமா?'னு பிடுங்கி எடுத்தா, ‘நீ சிரிக்கும்போது கன்னம் சுருங்கும் தெரியுமா?', ‘லைட்டா மேக்கப் போட்டாலும் அச்சு அசல் அழகியா இருப்ப நீ', ‘பல தடவை செத்துடலாம்னு இருந்திருக்கேன். உன்னைப் பார்த்ததுக்கு அப்புறம்தான், எனக்கு வாழணும்னே தோணுச்சு'னு கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள்ல வர்ற வசனங்களா இல்லாம, தேடிப்பிடிச்சு  'ஓவர் ஆக்டிங்'தான் கொடுப்பாங்க பசங்க. ஆனா, இதெல்லாம் ஓவர் ஆக்டிங்தான்னு தெரிஞ்சுமே, மறுபடியும் ‘நான் எப்படி இருக்கேன்?'னு ஆரம்பிக்கிற பொண்ணுங்களைப் பார்த்தா, என்னத்தைச் சொல்றது, அடுத்த பாயின்ட்டுக்குப் போங்க!

அப்பாகிட்ட நிமிர்ந்து பேச மாட்டோம். அம்மாதானே? டீல்ல விட்டு காசைக் கறக்கலாம். மூஞ்சியைப் பாவமா வெச்சுக்கிட்டாலே கரைஞ்சுபோற அம்மாக்கள்கிட்ட, ‘காலேஜ்ல எல்லோரும் நோட்டு வாங்கிட்டாங்க. நான் மட்டும்தான் வாங்கலை தெரியுமா?' மூஞ்சியைச் சுண்டி ‘ஓவர் ஆக்டிங்' கொடுப்போம். பதறியடிச்சுப்போற அம்மாக்கள், மிளகாப் பானைக்குள்ள பதுக்கி வெச்ச பணத்தையோ, அரிசி மூட்டைக்குள்ள செருகி வெச்ச பணத்தையோ எடுத்து நீட்டுவாங்க. # அம்மான்னா சும்மா இல்லைடா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்