அந்த ‘விடியல்’ என்னாச்சு?

ள்ளாட்சித் தேர்தலும் வரப்போகுது. இந்த நாடாளும் மக்கள் கட்சியின் அடுத்த அலப்பறைகள் எப்படி இருக்கும்..?

தேர்தல் கூட்டணிப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறாங்கனா, அடுத்த அஞ்சாவது நாள் எலெக்‌ஷனா இருக்கும். அல்லது எலெக்‌ஷன் நடக்குதுனா அதுக்கு அஞ்சு நாள் முன்னாடிதான் கூட்டணிப் பற்றி பேச ஆரம்பிப்பாங்க. ஒண்ணுமே புரியலைல? ஃப்ரீயா விடுங்க. அவங்களுக்கே புரியாததுதான்!

காரில் பெட்ரோல் காலியாகி பிரேக் டவுன் ஆகி தலைவர் நடுரோட்டில் நின்னாலும் எதிர்க்கட்சியோட கூட்டணி பேசக் கூடாதுனு இது ஆளுங்கட்சி செய்ற சதி. மோகன் நடிச்ச படம் விதி அப்படினு வாயிக்கு வந்ததையெல்லாம் குண்டாங்கொலையாகக் கழகத் தொண்டர்கள் கிளப்பிவிடுவார்கள்!

நல்ல மீன்கள் விற்கப்படும், மீன்கள் விற்கப்படும்னு வடிவேல் அழிச்சு அழிச்சு எழுதுற மாதிரி அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சினு இருந்த பேரை ஷார்ட்டா வெச்சா மட்டும் தமிழ்நாட்டையே புரட்டிப் போடப்போகிற மாதிரி நாடாளும் மக்கள் கட்சினு மாற்றினாங்க. அப்படியே ‘நாடாளும் கட்சி’ , ‘கட்சி’னு மாத்திக்கிட்டே போனாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை!

எந்தப் பொரியல்அணிகூட வேணும்னாலும் கூட்டு வைக்கட்டும். எந்தக் கூட்டணியில் இருந்து பிரிந்துவந்து பொங்கல் வைக்கட்டும். ஆனா அதுக்குக் காரணம்னு சொல்லி விளக்கம் கொடுப்பாங்க பாருங்க. மீ  பாவம் ஃப்ரெண்ட்ஸ்!

லெஃப்டுல இண்டிகேட்டர் போட்டு ரைட்டுல கையைக் காட்டி ஸ்ட்ரெயிட்டா வண்டியை ஓட்டிக்  கடைசியில் கரண்டு கம்பத்துல விடுகிற மாதிரி இவங்களுக்கு ஆதரவு, அவங்களுக்கு ஆதரவுனு சொல்லி தேர்தலுக்கு முதல்நாள் நைட்டுதான், பெருங்கட்சிகளால் கழட்டி விடப்பட்ட கட்சிகளின் சங்கத்திலிருந்து சில கட்சிகளை சேர்த்துக்கொண்டு விடியல்2, விடியல்3 னு  கூட்டணியை ஆரம்பிப்பாங்க. விடிஞ்சா தேர்தல், அப்போ விடியல் கூட்டணிங்கிற பேரு கரக்ட்தானே ஒறவுகளே!

ஆமா... ஒரு டவுட்டு. விடியல் கூட்டணினு 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னாலேயே ஆரம்பிச்சாங்களே... அது அந்தத் தேர்தலுக்கா இல்லை இனிமே வரப்போற தேர்தலுக்கா?  பாவத்தே,  அவங்களே கன்ஃபியூஸ் ஆகிட்டாங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்