மைக்கை அவர்கிட்ட கொடுங்க!

மிழ் சினிமாவில் நிறையப் படங்களில் இவருக்குப் பதில் இவர் நடித்திருந்தால் செம்மையாக இருந்திருக்கும் என சில நேரம் நாம் யோசித்திருப்போம். ஆனால் பல வெற்றிப் படங்களில் முதலில் ஒரு நடிகர் நடிப்பதாக இருந்து, ஷூட்டிங்கூட ஆரம்பித்துப் பின்னர் பல காரணங்களால் அந்த நடிகருக்குப் பதில் வேறொருவர் நடித்திருப்பார். அப்படிப்பட்ட சில படங்கள்.

மெகாஹிட் அடித்த ‘முதல்வன்’ திரைப்படம் ரஜினிகாந்தை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டது. அரசியல் நெடி அதிகமாக இருந்ததால், அவர் நடிக்க மறுத்துவிட்டார். அதன்பின் இந்தப் படம் விஜய்க்கு போய், கடைசியில் அர்ஜூன் ஒப்பந்தமானார். வெறுப்புடா!

‘எந்திரன்’ படத்தில் முதலில் கமல்ஹாசன் நடிப்பதாக இருந்தது. ‘ரோபோ’ என்ற பெயரில் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுடன் போட்டோஷூட் உட்பட நடந்தது. பின்னர் கமல் நடிக்க முடியாமல் போக, சூப்பர் ஸ்டாருக்காக கதை மாற்றப்பட்டது. அதேபோல் ‘ஜென்டில்மேன்’ கதையும் முதலில் கமலிடமே சொல்லப்பட்டது. நடிக்கலைனு சொல்லலை, நடிச்சிருந்தா நல்லாருக்கும்னு சொல்றோம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்