போகேமான் ஜாக்கிரதை!

டந்த சில நாட்களாக உலக அளவில் ட்ரெண்டாகிக்கொண்டிருக்கும் ஒரு விளையாட்டு போகேமான் கோ. ஆங்ரி பேர்ட்ஸ், கேண்டி க்ரஷ், க்ளாஷ் ஆஃப் க்ளான்ஸ் கேம்களை விளையாடி ஓய்ந்து மினி மிலிஷியா பக்கம் திரும்பிய கேமர்கள் இப்போது போகேமான் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். கேம் ரொம்ப சிம்பிள். தெருத் தெருவா மிருகங்களைத் தேடி அலைஞ்சு பந்துக்குள்ள அடைக்கணும் அவ்வளவுதான். இந்தியாவில் இந்த கேம் வெளியிடப்படவில்லை என்றாலும், அதன் ஏபிகே ஃபைலை டவுன்லோடு செய்து பலர் விளையாட ஆரம்பித்து விட்டார்கள். இப்போதே மீம்ஸ், வீடியோ மீம்ஸ் என நம் ஊர் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டது. ஒருவேளை, நம் ஊரில் அதிகாரபூர்வமாக இந்த கேம் வெளியானால் என்னவெல்லாம் நடக்கும்?

ஊர் ஊரா, தெருத் தெருவா அலைந்து திரிந்துதான் இந்த கேமை விளையாட முடியும் என்பதால், உருட்டுக்கட்டை சைஸ் இருக்கிறவங்க விளக்கமாறு குச்சி அளவுக்கு ஒல்லி ஆகிடுவாங்க. அப்போ, விளக்குமாறு குச்சி சைஸ்ல இருக்கிறவங்க என்ன ஆவாங்க?னு கேட்டால் நான் என்னத்த சொல்வேன் பகவானே...

நாளடைவில் நெட் ஓப்பன் பண்றதே போகேமான் விளையாடத்தான் என்ற நிலை வந்துவிடும். அப்புறம் சன்னி லியோன், ஷாஷா க்ரேவையெல்லாம் பார்த்தால் ‘இவங்க யார் உங்க வொய்ஃபா?’னு ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தில் வரும் சார்லி மாதிரி கேட்க ஆரம்பிச்சுடுவாய்ங்க பயபுள்ளைக.

ஏற்கெனவே டிராஃபிக்கில் ஊறிப்போன சென்னை மாநகரம், இனி டிராஃபிக்கில் நாறிப்போக ஆரம்பித்துவிடும். போகேமான் பிடிக்கிறேன் என சாலையின் குறுக்க மறுக்க ஓடிப்பிடிச்சு விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். பலரும் ‘வீட்டில் சொல்லிவிட்டு வந்துட்டியா?’ எனத் திட்டுவாங்குவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்