சினிமா விடுகதை!

`என்னம்மா கண்ணு' சத்யராஜ் நடித்த படங்கள் தான் இந்த வார சினிமா விடுகதைக்கான விடைகள் பாஸ்.

1. முட்ட முட்ட குடிப்பான் முட்டத்து முரட்டுப்பய... பாடம் சொல்லிக் கொடுத்த டீச்சரையே டாவடிப்பான் இந்த டார்லிங் பய... கொடியில மணக்கும் பூ என்ன பூனு தெரிஞ்சா ஈஸியா சொல்லுவீங்க ஆமா..!  என்ன படம் இந்தப் படம்?

2. கண்ணுக்குள்ள பூ விழுந்துச்சா? பல மொழிகள்ல ரீமேக் ஆன படமப்பா! காது கேட்காத குட்டீஸும் ஓங்கி வளர்ந்த  ரெட்டை வில்லன்களும் தெறிக்கவிட்ட படம்னா சொல்வீங்கதானே..?

3. மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் சரி... மூன்று வார்த்தைகள் சொன்னா  'க க க'-போனு கண்டுபிடிப்பீங்களே மக்கா!  கமல் தயாரிச்ச படத்துல கமல் நடிக்கவே இல்லை. என்ன படம் இந்தப் படம்?

4. குட்டிப்பையன் கேள்வியாலேயே அறைஞ்சதும், கைக்குட்டையில் லவ்லெட்டரை எழுத வெச்சதையும் மறக்க முடியுமா? சாதி பத்தி சாட்டை சொடுக்கின படத்துக்கு விருதுக்கு மேல விருது கிடைச்சதெல்லாம்  'புதிது' பாஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்