நம்பிட்டீங்களா?

நாம், பிரபலங்கள் யாருடனாவது போட்டோ எடுத்துப் போட்டால், இந்தச் சமூகம் முதலில் கேட்கும் கேள்வி ‘போட்டோஷாப்பா?’. ‘இது போட்டோஷாப்பில் எடிட் செய்தது அல்ல, நானே எடுத்ததாக்கும்’ என நாம் புரியவைப்பதற்குள் வாயில் புகை வர ஆரம்பித்துவிடும். இப்படி உண்மையான போட்டோவையே நம் மக்கள் நம்ப மாட்டேன் என்பார்கள். ஆனால், ஜெர்மனியைச் சேர்ந்த கிராஃபிக் வடிவமைப்பாளர் லாரன்ஸ் வேலன்டினோவோ பிரபலங்களுடன் இருப்பதுபோல் போட்டோஷாப்தான் செய்கிறார். ஆனால், இது போட்டோஷாப்தான் என உங்கள் மனம் நம்பமறுக்கும். அந்த அளவுக்கு தத்ரூபமாக போட்டோ எடிட்டிங்கில் புகுந்து விளையாடுகிறார். இந்த எடிட்டிங் கலையோடு கொஞ்சம் கலாயும் சேர்க்க வேலன்டினோ இப்போது உலகப்பிரபலம். அவர் எடிட் செய்துள்ள படங்களைப் பார்த்தாலே ‘நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணணும்’ என்பது உங்களுக்குப் புரியும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்