கபடி...கபடி!

படி பற்றிய விரிவான தகவல்களை மூச்சுவிடாமல் தம் கட்டிப் படியுங்கள் பார்க்கலாம்.

கபடி விளையாட்டானது, தெற்காசிய நாடுகளில் அதிகமாக விளையாடப்பட்டு வருகிறது. ‘கை பிடி’ என்ற தமிழ் வார்த்தைகளே மருவி கபடியாக உருவானதாக நம்பப்படுகிறது.

பங்களாதேஷ் நாட்டின் தேசிய விளையாட்டாக கபடி உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மஹாராஷ்டிரா, பீகார் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் மாநில விளையாட்டாகவும் கபடி உள்ளது.

2004-ம் ஆண்டுமுதல் நடைபெற்றுள்ள ஏழு ஆண்களுக்கான கபடி உலகக்கோப்பைத் தொடர்களிலும் இந்தியாதான் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதேபோல் இதுவரை நடைபெற்றுள்ள மூன்று மகளிருக்கான கபடி உலகக்கோப்பைத் தொடர்களிலும் இந்திய அணிதான் உலக சாம்பியன்.

ஆசியக்கோப்பை மற்றும் தெற்காசியக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை நடைபெற்ற அனைத்து கபடிப் போட்டிகளிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவில் இந்தியாதான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

2012-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன் கபடிப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடுவரின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்து, இந்திய அணி பாதியில் வெளியேறியது. இதன் காரணமாக பாகிஸ்தான் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தியா இரண்டாம் இடம் பெற்ற ஒரே தொடர் இது மட்டுமே. தற்போது ஜப்பான், நியூசிலாந்து உள்பட சுமார் 40 நாடுகள் சர்வதேசக் கபடிக் கூட்டமைப்பில் உள்ளன.

ஐ.பி.எல். போன்று கபடிக்கு நடைபெற்று வரும் ப்ரோ-கபடித் தொடரில் தேசிய அணியின் கேப்டனான ராகேஷ் குமார் 12.8 லட்சத்திற்கு பாட்னா பைரேட்ஸ் அணியால் ஏலத்திற்கு எடுக்கப்பட்டார். இதுவே இத்தொடரின் அதிகபட்ச ஏலத்தொகை ஆகும்.

இங்கிலாந்து, ஈரான், ஆப்கானிஸ்தான், மலேசியா உள்பட பல நாடுகளின் கபடி அணிகளுக்குப் பயிற்சியாளர்களாக இந்தியர்களே செயல்பட்டு வருகின்றனர்.

ஒலிம்பிக் போட்டியில் கபடியைச் சேர்க்க வலியுறுத்தும்படி உலகம் முழுவதும் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்