கிரிக்கெட் தமிழச்சி!

லகக்கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முதல் சதத்தைப் பதிவுசெய்து பெருமைப்படுத்திய தமிழக கிரிக்கெட் வீராங்கனை ‘ஆல்ரவுண்டர்’ திருஷ் காமினியுடன் சுவாரஸ்யமாய் ஒரு பேட்டி...

‘‘திருஷ் காமினி - என்ன அர்த்தம்?’’

‘‘அர்த்தமெல்லாம் எதுவும் இல்லை. தி மட்டும் நியூமராலஜி. அடுத்த எழுத்துக்கள் தாத்தா, அப்பா, பாட்டி, அம்மாவோட பெயரில் இருக்கும் எழுத்துக்களை வெச்சு உருவாக்கினது.’’

‘‘எப்போ வந்துச்சு கிரிக்கெட் ஆர்வம்?’’

‘‘சின்ன வயசுல டிவி-யில அப்பா, மேட்ச் பார்க்கும்போது நானும் பார்ப்பேன். அப்பப்போ ஸ்கோர் கேட்கிறதுனு ஆரம்பிச்சு அதுவே என்னை பிளேயராக்கிடுச்சு.’’

‘‘ஆரம்பத்தில் நீங்க தடைகளா உணர்ந்தவை?’’

‘‘அப்போல்லாம் கேம்ப்ல பசங்கதான் இருப்பாங்க. பொண்ணுங்க ஈஸியா சேர முடியாது. வித்தியாசமாப் பார்ப்பாங்க.’’

‘‘இப்போ மகளிர் கிரிக்கெட்டில் தமிழர்கள் நிலை எப்படி இருக்கு?’’

‘‘BCCI டேக் ஓவர் பண்ணினதுக்கு அப்புறம் நிறைய வசதிகள் கிடைக்குது. தொழில்ரீதியான கிரிக்கெட்டர்கள் உருவாகிட்டு வர்றாங்க.’’

‘‘ஆண்கள் கிரிக்கெட்டுக்கு இருக்கிற வரவேற்பு இல்லையே?’’

‘‘நான் விளையாட ஆரம்பிச்சப்போ பெண்கள் கிரிக்கெட்டுனு ஒண்ணு இருக்கிறதே அவ்வளவா தெரியாது. நாங்களும் சில சாதனைகள் பண்ணினதுக்குப் பிறகு இப்போ நல்ல ஸ்பான்சர்ஷிப் கிடைக்குது. கண்டிப்பா நல்ல வளர்ச்சிதான்.’’

‘‘உலகக்கோப்பையில் இந்தியாவின் முதல் சதம் அடிச்சது நீங்கள். அந்த மேட்ச் ஆடும்போது எப்படி இருந்தது?’’

‘‘அந்த உலகக்கோப்பையில் கலந்துக்கிறதுக்கு முன்னாடி ரெண்டு வருசம் காயம்பட்டிருந்ததால், விளையாடாமல் இருந்தேன். ஆனாலும் எனக்கு அது கம் பேக் மேட்ச். என்னோட பெஸ்ட்டை நான் கொடுத்தே ஆகணும்னு விளையாடினேன். சதம் அடிச்சு முடிச்சபிறகுதான் ஒரு பெரிய சாதனையைப் பண்ணிருக்கோம்னு தெரியும்.’’

‘‘பெரிசா சாதித்தபிறகும் கவனிக்கப்படாத ஏக்கம் இருக்கிறதா?’’

‘‘அப்படி எதுவும் தெரியலை. ஆனால், நான்கைந்து வருடங்களாக நிலைமை பரவாயில்லை.’’

‘‘எதிர்காலத் திட்டம்?’’

‘‘இன்னும் என்னால் இந்தியாவுக்காக அதிகபட்சமா எவ்வளவு ரன் அடிக்க முடியுமோ, அவ்வளவு அடிக்கணும். பெண்கள் விளையாட்டுத்துறையில் படும் அவஸ்தைகள் ஒரு பெண்ணாக எனக்குத் தெரியும். அதை மாற்றி நல்ல வீராங்கனைகளுக்கு வாய்ப்புகள் அமைச்சுத் தரணும்.’’

‘‘காதல்? திருமணம்?’’

‘‘லவ் பண்றதுக்கெல்லாம் நேரம் இல்லை. கல்யாணத்துக்கு இப்போ அவசரம் இல்லை.’’

‘‘ரோல்மாடல்?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்