"தனுஷுடன் நடிக்க வெயிட்டிங்!"

‘மான் கராத்தே’ படத்தில் தன் மழலைப் பேச்சாலும் கியூட் நடிப்பாலும் தனியாகத் தெரிந்த மாயா, தற்போது ‘டார்லிங்-2’ ‘உன்னோடு கா’ என அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக நம் இளைஞர்களின் வால்பேப்பரை ஹாக் செய்துகொண்டு இருக்கிறார். அவருடன் ஒரு ஜாலியான அரட்டை...

‘‘உங்களைப் பற்றி...’’

‘‘பக்கா சென்னைப் பொண்ணு நான். ஸ்கூல், காலேஜ்ல நிறைய ஸ்டேஜ் ஷோ பண்ணியிருக்கேன். ஆனால் நடிகையாகணும்னு எல்லாம் பண்ணலை. ஃப்ரெண்ட்ஸ்கூட ஜாலிக்கு பண்ணினது. நான் ஒரு பல் டாக்டர்.  என் ஃப்ரெண்ட்தான் ‘மான் கராத்தே’ ஆடிஷனுக்குக் கூட்டிட்டுப் போனான். எப்படியோ செலெக்டாகி நடிகை ஆகிட்டேன்.’’

‘‘எந்த மாதிரி ரோல்கள்ல நடிக்க ஆசை?’’

‘‘சும்மா வந்து பாட்டுப் பாடிட்டு டான்ஸ் ஆடிட்டுப் போகிற ரோல்ஸ் மாதிரி இல்லாம, ஆழமான கதாபாத்திரங்கள்ல நடிக்கணும்னு ஆசை.’’

‘‘எந்த ஹீரோகூட நடிக்கணும்?’’

‘‘தனுஷ். நடிக்க வர்றதுக்கு முன்னாடியே அவரோட பெரிய ஃபேன் நான். ரொம்ப அழகா, இயல்பா நடிப்பார். அவர்கூட நடிக்க நான் வெயிட்டிங்.’’

‘‘டாக்டர்- நடிகை எது ரொம்பப் பிடிச்சுருக்கு?’’

‘‘இரண்டுமே. சின்ன வயசுல இருந்தே டாக்டராகணும்ங்கிறது என் கனவு. இப்போ ஒரு சின்ன பிரேக் விட்டு இருக்கேன். அதே சமயம் சினிமாவும் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். அதனால் இப்போதைக்கு இரண்டையும் பேலன்ஸ் பண்ணிப் போயிக்கிட்டு இருக்கேன். வருங்காலத்துல படிப்பா, நடிப்பானு வந்தா, பார்த்துக்கலாம்.’’

‘‘உங்க பெட் நேம்ஸ்?’’

‘‘வீட்ல ‘அப்பு’னு கூப்புடுவாங்க. ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு நல்ல சுருட்டை முடி இருக்கிறதால ‘மேகி’னு கூப்புடுவாங்க.’’

‘‘பல் டாக்டர்னு சொல்றீங்க. யாருக்காச்சும் பல்லை மாற்றிப் பிடுங்கிய அனுபவம் உண்டா?’’

‘‘பல தடவை நடந்திருக்க வேண்டியது. பேஷன்ட் வாயைத் திறந்தபிறகுதான் ‘ஏதோ சரியில்லையே’னு தோணும். இல்லைனா இந்நேரம் பல கொலை கேஸ் ஆகி இருக்கும்.’’

‘‘லவ் புரபோசல்ஸ்?’’

‘‘காலேஜ் படிக்கும்போது நிறைய சீனியர்ஸ் புரபோஸ் பண்ணியிருக்காங்க. நான் நல்லாப் படிக்கிற பொண்ணு. அதனால நான் எல்லாத்தையும் ரிஜெக்ட் பண்ணிட்டேன். எனக்கும் யார் மேலேயும் தோணலை. இனிமே வர்ற அப்ளிகேஷன்ல ஏதாச்சும் செலெக்ட் பண்ணிடணும்னு இருக்கேன்.’’

என்ன... ரெடியா பாஸ்?

-நிர்மல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick