ஆஃப் த ரெக்கார்டு!

தாராளக் கவர்ச்சியை அள்ளி வழங்கிய படங்கள் பெரிய அளவில் போகாததாலும், தனக்கு இருந்த நல்ல நடிகை என்ற பெயர் காணாமல் போனதாலும் வழக்கமாக நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க கடைத்தெரு நடிகை முடிவெடுத்துள்ளாராம்!

இதய வாரிசு நடிகர், படங்களில் நடித்து வந்தபோதே கொஞ்சம் பந்தாவாகத்தான் சுற்றி வந்தாராம். தற்போது தயாரிப்பாளராகவும் மாறிவிட்டதால் ரொம்பவே அலப்பறை செய்கிறாராம். தந்தையின் பெயரை மகன் கெடுத்து விடுவாரோ? எனப் பேசிக்கொள்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!
 
தன் கணவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால், அவரை வைத்து சொந்தப் படம் தயாரிக்க முடிவெடுத்த நட்பு நடிகை பாதிப் பணத்தை ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம். மீதிப் பணத்தை இன்வெஸ்ட் செய்ய ஒரு பார்ட்னர் தேட, யாரும் பணம் கொடுக்க முன்வராததால் நடிகை சோகத்தில் இருக்கிறாராம்!

தான் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியைத் தராததால், அடுத்து என்ன படத்தில் நடிப்பது என்று முடிவெடுக்க முடியாமல் குழம்பிப் போயிருக்கிறாராம் பிரகாச நடிகர். இதனால் ஓகே செய்து வைத்திருந்த தெலுங்கு இயக்குநரின் படத்தைத் தள்ளி வைத்துவிட்டு, உச்ச நடிகரை இயக்கும் இயக்குநரின் அடுத்த படத்தில் நடிக்கிறாராம்!

வழக்கமாகத் திட்டமிட்டபடி படப்பிடிப்புக்குக் கிளம்பும் உலக நடிகர் சமீபத்திய தேர்தல் களேபரத்தால், எதுவும் ஒழுங்காக நடக்கவில்லையாம். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருக்கிறதாம். படம்  வெளியாகத் தாமதமாகும் என்கிறார்கள் படக்குழுவினர்!

சங்கத்தின் தலைவரை வெறும் பொம்மையாக மட்டுமே வைத்திருக்கிறார்களாம். முக்கிய முடிவுகளை தலைவரிடம் கலந்து ஆலோசிக்காமல் செயலாளரும், பொருளாளருமே எடுக்கிறார்களாம். இதனால் தலைவர் கடுப்பில் இருக்கிறாராம்!

இசையமைப்பாளராக இருந்து ஹீரோவான வெற்றி நடிகர் நடித்த சமீபத்திய படங்கள் தெலுங்கிலும் சூப்பர் ஹிட் ஆனதால், சம்பளத்தைப் பல மடங்கு அதிகரித்துவிட்டாராம். அப்படி இல்லையெனில் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்துத் தருகிறேன் எனக் கூறி பெரும் தொகையைக் கேட்கிறாராம். இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்