என்னா அறிவு!

நிஜ விஞ்ஞானிகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் நம் தமிழ் சினிமா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பல அரிய கண்டுபிடிப்புகள் இவை. வாங்க, டைம் மெஷின்ல ஏறி ஜாலியா ஒரு ரவுண்டு போகலாம்!

‘உலகம் சுற்றும் வாலிபன்’ எம்.ஜி.ஆர் மின்னலைப் பிடிக்கும் ஆராய்ச்சியாளர். பிடித்த மின்னலை பத்திரமாகப் பாதுகாக்கும் ரகசியமும் அவருக்குத் தெரியுமாம். வாம்மா மின்னல்!

‘தசாவதாரம்’ கமல் கண்டுபிடிச்சது சிந்தடிக் பயோ வெப்பன். தீப்பெட்டி சைஸில் இருக்கும் இந்தக் கிருமி சூடானால் தீயில் போட்ட பிளாஸ்டிக் வாளி மாதிரி நாமெல்லாம் உருகிடுவோமாம். சுனாமி நல்லதுன்னு நிரூபிக்க இந்தக் கண்டுபிடிப்பு அவசியம் என்கிறார் கமல்.

‘எந்திரன்’ புரொஃபஸர் போரா, கண்டுபிடிச்சது ரெட் சிப்.  ஒரு இராணுவமே எதிர்த்து வந்தாலும் மொத்தப் பேரையும் துவைச்சு துவம்சம் பண்ணும் சக்தியைக் கொண்டது இந்த சிப். ஆனால் ஐஸ்வர்யாராய் முன்னால் மட்டும் அமைதியாக  இருக்குமாம். ஐஸ் முன்னால் உருகத்தானே வேணும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்