வாழ்க்கையே க்ளிஷேதான்பா!

ல்லா சினிமாவிலும் வழக்கமாக, பொதுவாக இருக்கும் விஷயங்களை ‘சினிமா க்ளிஷேக்கள்’ என்று சொல்வோம். அதுபோல் ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் நடக்கும் பொதுவான விஷயங்களை இங்கே பதிவு பண்ணி இருக்கிறோம். படித்துப் பாருங்கள் மக்களே...

எல்லோருக்கும், நாம முதன்முறையா ஃபீல் பண்ண பப்பி லவ் படுத்து, குறட்டைவிட்டிருக்கும். ஆனால், இன்னும் அந்தப் பொண்ணு நம்மகூட பாஸ்வேர்டு ரூபத்துல வாழ்ந்துட்டு இருக்கும்.

பத்தாப்புல மார்க் வாங்கின அதப்புல அசால்ட்டா இருந்து படிக்காம விட்டு பன்னிரெண்டாம் வகுப்புல மார்க் குறைஞ்சுருப்போம்.

சைக்கிள் ஓட்டிப் பழகுறப்போ குரங்குப்பெடல் அடிச்சுட்டே போய் பல் போன பாட்டி மேல செருகி, சாபம் வாங்கிருப்போம்.

திடீர்னு பேன்ட் அபாயகரமான பகுதிக்கு அருகில் கிழிந்துபோக, கலங்கிப்போய் கர்சீஃப்பை வெச்சு கவர் பண்ணிக்கிட்டே வீடு வந்து சேர்ந்திருப்போம்.

‘மச்சான் பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் மட்டும் பண்ணிவிடுடா’ என நண்பனிடம் போனைக் காலாக நினைத்து கெஞ்சி இருப்போம்.

ஆர்வக்கோளாறுல மீசையை ஷேவ் பண்ணிட்டு, அப்புறம் துணியால் முகத்தைப் பொத்தி தலைமறைவா திரிஞ்சிருப்போம்.

பஸ் படியில் பந்தாவா தொங்கிட்டுப் போய், கண்டக்டர்கிட்ட ஏழு தலைமுறைக்கு சேர்த்துத் திட்டு வாங்கி யிருப்போம்.

கல்யாண வீட்டில் ஏதேனும் ஒரு பெண்ணைப் பார்த்து காதல் வயப்பட்டிருப்போம். பந்தியில் அந்தப் பொண்ணு எதிரில் உட்கார பக்காவாக பிளான் பண்ணியிருப்போம்.

ஸ்கூல் கடைசி நாள், காலேஜ் கடைசி நாள், கல்ச்சுரஸ் போன்ற நாட்களில்தான் முதல்முறையாக சோமபானத்தை வாயில் இறக்கியிருப்போம்.

நம்ம நண்பனோட சட்டையை ‘போட்டுத் தரேன் மச்சான்’னு வாங்கிட்டு வந்து, அதைத் திருப்பித் தராமல் அல்வா கொடுத்திருப்போம். அதுவும் பீமபுஷ்டி அல்வா.

கையில் ரெண்டு ரூபாய்கூட இல்லாமல், மற்றவர்களிடம் கடன் கேட்கவும் வெட்கப்பட்டு குறைஞ்சது மூணு நாலு கிலோமீட்டராவது கால்கடுக்க நடந்திருப்போம்.

நமக்குத் தெரிஞ்ச புள்ளப்பூச்சி எவன் கூடயாவது பொண்ணு பேர்ல சாட் பண்ணி பல்பு கொடுத்திருப்போம். அதேபோல் பல பல்பும் வாங்கியிருப்போம்.

நெஞ்சு படபடக்க, அரக்கப் பறக்க ஓடிப்போய் வாங்கிட்டு வந்த, பிட்டு பட சி.டி. ஓடாம ஸ்ட்ரக் ஆகி நின்னு போயிருக்கும். ச்சை.

இதுபோல் இன்னும் பல க்ளிஷேவான விஷயங்கள் ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் நிரம்பியிருக்கு. அதேபோல், வெறும் பசங்க வாழ்க்கையில் நடக்குற க்ளிஷேக்கள் மட்டும்தான் எழுதுவீங்களா? பொண்ணுங்க வாழ்க்கையில் நடக்குற க்ளிஷேக்களை எழுத மாட்டீங்களான்னு அடுத்த வாரம் வாசகர் கடிதத்தில் யாராவது கேட்பாங்க!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick