டார்ச்சர்ஸ் தேவதைகள்!

‘தரமணி’ டீஸர்ல பசங்களோட லவ் டார்ச்சர்களை புட்டுப்புட்டு வெச்சாங்க இல்லையா? பொண்ணுங்க மட்டும் சும்மாவா? காலம்காலமா பசங்களுக்கு அவங்க கொடுக்கிற டார்ச்சர்ஸ் டீஸர் ஓட்டுவோமா?

எதுக்கெடுத்தாலும் தங்களை ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ ஹாசினி்களா ஃபீல் பண்ணுறது. தான் குழந்தை மனம் கொண்டவள் என்பதை உணர்த்தும் விதமாய் அநியாயத்துக்கு மழலை மொழி பேசிக் கொல்வார்கள். ‘‘எனக்கு மழையில் ஐஸ்க்ரீம் சாப்பிடுறதுனா அவ்வளவு பிடிக்கும்”, ‘‘அம்மா மடியிலதான் தூங்குவேன்”, ‘‘தயிர் சாதமா?... ஓ ஷிட்’’ எனப் பொருமுவார்கள். ‘‘ஷிட் இல்லைம்மா...சாதம்’’ எனப் பாடம் எடுக்க வேண்டும். ‘‘எனக்கு உன் பைக்ல 120 கிலோமீட்டர் வேகத்துல போகணும் போல இருக்குடா’’ எனச் செல்லம் கொஞ்சுவார்கள். அடியேய்... ஸ்ப்ளெண்டர் பைக்ல 120 கிலோமீட்டர்லாம் போக முடியாது!

இப்படிக் குழந்தையைப் போல இருக்கும் குமரிகள் அப்படியே இருந்தாலே தேவலாம் எனச் சொல்லும் அளவுக்கு திடீர் சாம்பார், திடீர் ரசம் போல திடீர் ஃபெமினிஸம் பேசிக் கொல்வார்கள். ‘‘அவன்தான் என்னை லவ் பண்ணுறான். உன்கூட இருக்கிற லவ்வுக்காக அவனைக் காயப்படுத்த விரும்பலை’’ எனத் தகுதியே இல்லாத ஒருவனுக்காக வக்காலத்து வாங்குவார்கள். ‘‘ஒரு பையன் மட்டும் பலபேர்கூட பழகலாமா?’’ என்ற க்ளிஷே டயலாக்கை எடுத்து விடுவார்கள். அடி என் ராசாக்கிளி அவன் நல்லவனா இருந்தா, நான் என்ன சொல்லப்போறேன் என்பது உங்கள் மைண்ட் வாய்ஸ்!

மதர் தெரசா அவதாரம் எடுக்கிறதும்கூட அவங்க ஹாபி பாஸ். எவன் என்ன சொன்னாலும் நம்பி அப்படியே தங்கள் நட்பைக் கொண்டாடுவார்கள். ‘‘நான் ஏன் அந்தப் பையனோட பழகுறேன் தெரியுமா? அவனுக்கு சின்ன வயசுல ப்ரெயின் ட்யூமராம். அதனாலதான்’’ என்பார்கள். எப்படி எல்லாம் ஏமாத்துறாய்ங்கே. அவ்வ்வ்வ்!

திடீர் திடீரென லட்சியத்தில் யூ-டர்ன் போட்டு, சுளுக்கு வரவைப்பார்கள். நான் ஐ.ஏ.எஸ். படிக்கப்போறேன்னு ஒருநாள் சின்ஸியராய் சொல்வார்கள். இன்னொரு நாள், ‘எஜுகேஷன் சிஸ்டமே தப்பா இருக்கு. நான் எழுத்தாளரா ஆகப்போறேன்’னு சொல்வாங்க. மூணாவதா, ‘எழுத்துக்கு எங்கே மதிப்பு இருக்கு. நான் பிசினஸ் பண்ணப்போறேன்’ என்பார்கள். எதுவுமே இல்லையா... இருக்கவே இருக்கு ‘வாழ்க்கையே போரடிக்குது. செத்துப்போகலாம் போல இருக்கு’ என்ற வசனம். இதில் உங்கள் பகுதி என்னன்னா, அவங்க சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டிக்கிட்டு ‘சூப்பர் அம்மு’னு சொல்லத் தெரிந்திருக்கணும். கடைசியா சொன்ன டயலாக்குக்கு இதைச் சொல்லி காதலுக்கு ஆப்பு வெச்சுக்காதீங்க. என்ன பண்ணாலும் கொடி பிடிச்சாதான் உங்க காதலை உயிர்வாழ வைக்க முடியும் பாஸ்!

கட்டக் கடைசியாய், ‘‘இப்பொவெல்லாம் என்னை யாருமே சைட் அடிக்கிறது இல்லை. வரவர நான் மொக்கை ஆகிட்டேனா...? சொல்லு சொல்லு’’ என முகத்தை க்ளோஸ்-அப்பில் காட்டி பயமுறுத்துவார்கள். நீங்கள், ‘அவர்கள் கண்ணிருந்தும் குருடரடி என் தங்கமே’ என செல்லம் கொஞ்சத் தெரிஞ்சுக்கணும். இல்லைனா உங்களுக்கு அடிதான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்