கமென்ட்ஸ் கேர்ஃபுல்!

ரு நல்ல போஸ்ட் எந்த அளவுக்கு நமக்குப் பயன் தருமோ, அதே அளவு அதன் கீழ் போடப்படும் கமென்ட்டுகளும் நிறையப் பயன் தரும். எப்படின்னா இப்படித்தான்....

புதுசா ஒரு படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆச்சுனா, டிரெய்லரை பார்த்து முடிச்ச அடுத்த கணம் கமென்ட் ஏரியாவுக்குள்ளே சம்மர் சாட் அடிச்சுடுங்க. இந்தப் படம் எந்தப் படத்தோட இன்ஸ்பிரேஷன், காப்பி, டீ, டிகாஷன் என எல்லாவற்றையும் புட்டுப் புட்டு வைத்திருப்பார்கள். உலக சினிமா அறிவை வளர்த்துக்கலாம் பாஸ்.

அதேபோல், புதிதாக ஒரு படத்தின் இசை ஆல்பம் வெளியானாலும் கமென்ட் ஏரியாவுக்குள்ளே சம்மர் சாட் அடிச்சுடுங்க. இந்தப் பாட்டு எந்தப் பாட்டோட காப்பினு கண்டுபிடிச்சு ஆத்து ஆத்துனு ஆத்தி கசந்துபோக வெச்சுருப்பாய்ங்க. நீங்கள் அந்த ஒரிஜினல் பாடலின் ரசிகராகவும் அதிக வாய்ப்பிருக்கு. ஒரே பார்சலில் ரெண்டு பீஸு.

தல அல்லது தளபதி பற்றிய தம்மாத்துண்டு போஸ்ட்டாக இருந்தாலும் சரி, அதற்கு வந்திருக்கும் கமென்ட்டுகளை வாசிச்சீங்கனா செமையா பொழுதுபோகும். ஆனால், 18 வயசுக்குக் கீழே உள்ளவங்க, இதயம் பலவீனமானவங்க அந்தப் பக்கம் போய்டாதீங்க.

ஃபேஸ்புக்கில் பிரபலமானவர்களின் ஸ்டேட்டஸ்களுக்கு வரும் கமென்ட்டை கண் அசைக்காமல் கவனிச்சீங்கனா, போட்டோ கமென்ட்ஸ் போடுவதற்கு ‘முதல் மரியாதை' சிவாஜி மீன் பிடிக்கிற மாதிரி அத்தனை போட்டோஸ் சிக்கும். அதை வெச்சுக்கிட்டு உங்ககிட்ட சிக்குறவங்களை வெச்சு செய்யலாம்.

வழவழவென செல்லும் சில திரைப்படங்களில் சில சீன்கள் மட்டும் செமையா இருக்கும். அதுக்காக முழுப் படத்தையும் உட்காந்து பார்க்க முடியாதில்லையா (நாக்குத் தள்ளிடும்). இந்த மாதிரி நேரத்தில் கமென்ட் ஏரியாவுக்குள் நுழைந்தால்  ‘12:34 மாஸ் சீன், 56:17 சிரிச்சு மாளலை...' என கமென்ட்டுகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும். நாமும் அந்த டைமுக்கு ஸ்கிப் செய்து பார்த்துக்கலாம். முக்கியமா சாமிப் படங்களுக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்