பில் செட்டில் பண்ணலாமா?

ங்களுக்குத் தெரியுமா? ஹோட்டல் பில்லை டீல் பண்றதுல ஒரு கலையும் அறிவியலும் ஒளிஞ்சிருக்கு. அது எப்படினு கேட்கிறீங்களா? வாங்க சொல்றேன்...

நம்ம ஃப்ரெண்ட் ஸோட சேர்ந்து ஹோட் டலுக்குப் போய் சாப்பிட்டுட்டு பில் கட்டுற சீன்ஸ் இருக்கே... அது பல வகைப்படும். சர்வர் வந்து பில்லை வெச்ச உடனே, ‘‘எல்லாரும் ஈக்வலா ஷேர் பண்ணிக்கலாம் மச்சான்’’னு ஒருத்தன் டக்குனு குரல் விடுவான். பன்னாட்டு அதிபர்கள் ஏதோ சார்க் மீட்டிங்ல உட்கார்ந்து சம்மதம் தெரிவிக்கிற மாதிரி ஒவ்வொருத்தனா டப்பு டப்புனு சரி சொல்லிக்கிட்டே வருவானுங்க. திடீர்னு ஒருத்தன், ‘‘நீ வஞ்சிர மீன் தின்னே, நான் வெஜ் கட்லட்தானே சாப்பிட்டேன். அதெல்லாம் கிடையாது, எல்லோரும் அவர் அவர் ஆர்டர் பண்ணதுக்கு ஏத்த ஷேரைத்தான் கொடுக்கணும்’’னு அங்கே இருக்கிற பாதிப் பேர் (பாக்கெட்டில் 100 ருபாய் மட்டுமே உள்ளவர்கள்) வயித்துல புளியைக் கரைப்பான்.  திடீர்னு நம்ம  டேபிள்ல ஒரு கணித மேதை ராமானுஜம் உதிப்பார். போனை எடுத்து, ‘‘நீ பிரியாணி  சாப்பிட்டே, அவன் கோபி மஞ்சூரியன் சாபப்ி்ட்டான், டேய் யாரு ஸ்டார்ட்டர் சாப்ட்டது? யே... மசால் தோசையை என் காலம்ல போடாதே, அது ஷேர் பண்ணிக்கிட்டது'’னு ஒரு தலைப்பு செய்தியே வாசிச்சு பில்லை கால்குலேட்டர்ல க்ராஸ் செக் பண்ணுவான். பக்கத்துல நிற்கிற அந்த வெயிட்டர், ‘‘இவனுங்கள்ல எவன் நம்ம டிப்ஸைக் கொடுக்கப் போறான்?’’னு ஏக்கத்தோட பார்ப்பாரு.

இன்னொரு கேங் இருக்கு. இந்த மாதிரி சின்னப்பசங்க விளையாட்டு காண்பிக்காம, புரொஃபெஷனலா டீல் பண்ணிட்டுப் போய்க்கிட்டே இருப்பானுங்க. ‘‘மச்சான், பர்ஸே எடுத்துட்டு வரலைடா. எனக்கும் சேர்த்து நீ போட்ரு. நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா நான் உனக்கு ஸ்பான்சர் பண்றேன்’’ என்பான். நண்பன் இன்னும் சந்தேகமாகவே பார்த்தால், ‘‘எங்கம்மா ப்ராமிஸ்டா’’னு வாயை மூடிடுவான். சரினு எல்லோரும் சேர்ந்து அவனுக்குக் காசு போட்ருவாங்க. ஆனா, இதுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற ட்விஸ்ட் என்னன்னா, எல்லோர் தட்டுலேயும் கை வெச்சு பெரிய சிக்கன் பீஸையெல்லாம் தின்னவன் அவனாதான் இருப்பான்.

இதுல நமக்குப் பிடிச்ச வகை ஒண்ணு இருக்கு. ‘பில் ஓட்டப் பந்தயம்’.ஆமாங்க, பில் வந்தவுடனே, எல்லோரும் அந்த நோட்டுக்கு ஓடுவாங்க. ‘‘நான் கொடுக்கிறேன்... இந்தத் தடவை என்னுடையது. நான் பார்த்துக்கிறேன்...’’னு தாரள மனசு தாவித் தாவிக் குதிக்கும். ஆனா, கொஞ்ச நேரத்துல அப்படியே சீன் ஸ்லோமோஷனுக்கு மாறிடும். பக்கத்துல இருக்கிறவனுக்கு அதிர்ஷ்டவசமா பின்னாடி உள்ள பாக்கெட்ல இருந்து பர்ஸ் எவ்வளவு இழுத்தாலும் வெளியே வராது. எதிர்ல இருக்கிறவன், ஸ்பூனைக் கீழே தள்ளிவிட்டுட்டு நீர்மூழ்கிக் கப்பல் மாதிரி டேபிளுக்குக் கீழே போய்டுவான். இன்னொருத்தன் ‘‘மச்சான் ரொம்ப அர்ஜென்ட்டுடா’’னு பாத்ரூமுக்கு ஓடுவான்.

அதுக்குள்ளேயாடா செரிமானம் ஆகிடுச்சுனு நாம வாயைப் பிளந்து உட்கார்ந்திருக்கும்போது இன்னொருத்தன் எல்லா பாக்கெட்லேயும் கையை விட்டுட்டு, ‘‘அந்த க்ரெடிட் கார்டை எந்த பாக்கெட்ல வெச்சேன்னு தெரியலியே’’னு சொல்வான்.

கடைசியில் ஏலம் விடாமலேயே அது நம்ம பில்லாயிடும். ஏன்னா நம்ம பர்ஸைத்தான் சூப் சாப்பிட்டுட்டு மூக்குத் துடைக்க கர்ச்ீப் எடுக்கும்போதே, பாக்கெட்ல இருந்து டேபிள்ல எடுத்து வெச்சுட்டோமே.

எவ்வளவு கெட்-அப் மாத்தியும், மண்டை மேல இருக்கிற கொண்டையை மறந்தாச்சே! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்