கடனை இப்படியும் அடைக்கலாம்!

டிகர் சங்க செயலாளரானதும் நடிகர் விஷால் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாகக் கட்டடம் கட்டுவதற்காக எட்டு அணிகளைக் களமிறக்கி நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தினார். அதைப்போலவே கடன் தொல்லையில் சிக்கித்தவிக்கும் நம் பொதுத்துறை நிறுவனங்கள் என்னென்ன போட்டிகளை நடத்தி கடனை அடைக்கலாம்?. டைம்பாஸ் வழங்கும் டிப்ஸ் இதோ...

நம் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் கிட்டத்தட்ட திவாலாகி விட்டதால், டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், இதைவிட எளிதான வழி போக்குவரத்து கழகத்தின் எட்டு மண்டலங்களுக்கு இடையேயான கபடிப் போட்டிகளை நடத்தி சாம்பியன்ஷிப் அறிவித்திருக்கலாம். பிரபலமாக்க இருக்கவே இருக்கின்றன தமிழ் சேனல்கள்.

ஆவின் பால் நிறுவனம் தண்ணீரில் தத்தளித்துக் (சாரி... கடனில் தத்தளித்து) கொண்டிருப்பதால் தமிழகம் முழுக்க இருக்கும் குழந்தைகளுக்கு ‘உங்களில் யார் அடுத்த ஆவின் சாம்பியன்?’ எனும் பெயரில் மாவட்டங்கள் தோறும் டாலர், ஸ்ட்ராங்கர், ஷார்ப்பர் போட்டிகளை நடத்தி சம்மர் வெக்கேஷனில் இருக்கும் சிறுவர்களிடம் என்ட்ரன்ஸ் ஃபீஸை நைஸாக அள்ளி ஆவினை ஸ்ட்ராங்கர் ஆக்கலாம்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன்தொகை டி.சி.கரன்ட்டைப் போல சர்ரென்று உயர்ந்துகொண்டிருக்கிறது. கொஞ்சம் அசந்தால்கூட ஷாக் அடித்து அந்தத் துறைக்கே மொத்தமாக வேட்டு வைத்துவிடும் அபாயம் இருப்பதால், மின் மண்டலங்களுக்கு இடையேயான ஃபுட்பால் மேட்ச்சுகளை நடத்தி ஓரளவு கடனைக் கட்டுக்குள் கொண்டுவரலாம். போட்டிகளை பாப்புலராக்க மெஸ்ஸியையும், நெய்மாரையும் அம்பாஸிடர்களாக நியமிக்கலாம்.

அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி நாட்டைவிட்டு ஓடிப்போன விஜய் மல்லையாவும்கூட தைரியமாக இந்தியாவுக்கு வந்து தனது கிங்ஃபிஷர் ப்ராண்ட் சரக்கினை அடித்து அசராமல் நிற்பது எந்த மாநிலத்துக்காரர்கள் எனத் தேர்ந்தெடுக்கலாம். இதை டி.வி-யில் ஒளிபரப்பி ரைட்ஸ் உரிமையின் மூலம் லம்ப்பாக அள்ளலாம். கடன் பூராவும் அடைத்து இன்னொரு கம்பெனியை ஜெயிக்கிற மாநிலத்திற்குள் அமைக்கும் அளவுக்கு ஆதரவு குவியும் பாஸ்!

- சி.எஸ்.விக்கி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick