‘பாப்’பு... ‘பாப்’பு!

ம் தமிழ் சினிமா பாடல்களில் எப்படி வெளிநாட்டு கட்டடங்கள் முன் நின்று ஆடுவது, திருவிழா கூட்டத்தில் ஆடுவது என நிறைய க்ளீஷேக்கள் இருக்கிறதோ, அதே போல் ஆங்கில பாப் பாடல்களிலும் நிறைய க்ளீஷேக்கள் உண்டு. என்னவென்று பார்க்கலாமா?

பெரும்பாலான பாப் பாடல்கள் கட்டெறும்பு தடவிவிட்ட  மாதிரி காதுக்கு இனிமையாக ஆரம்பிக்கும். ஆனால், திடீரென இடையிலே ஹைபிட்சில் ‘ராப்’ பாடி, எருமை மாடு நெஞ்சுலேயே மிதித்தது போல் அலற வைப்பார்கள்.

அதிகமான பாப் பாடல்கள் பாக்கெட் சாராயம் அடித்துவிட்டு கிளப்பில் ஆடிக்கொண்டிருப்பதுபோல்தான் படமாக்கப்பட்டிருக்கும். அந்த கிளப்பில் எல்லாப் பெண்களும் குழந்தைகள் செக்‌ஷனில் டிரெஸ் வாங்கி அணிந்து கொண்டு குறுக்க மறுக்க நடந்துகொண்டிருப்பார்கள்.

திடீர் திடீர்னு உருளுதாம், சாயுதாம் என்பது போல அநியாயத்திற்கு கிராஃபிக்ஸ் காட்சிகளால் மிரளவைப்பார்கள். காதல் வந்ததும் உடம்பு தீ பிடிச்சு எரியறது (நம் ஊர் வெயிலுக்கு வெளியே வந்தாலே எரியும்), வானத்துக்குப் பறக்கிறது என ஷங்கருக்கே டஃப் கொடுப்பார்கள்.

நம் ஊர் சினிமாவுக்கு ‘ஹாரர்’ வைரஸ் தாக்கபட்டிருப்பது போல , பல வருடங்களாக பாப் பாடல்கள் ‘காதல்’ வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தோசைக்கல்லில் வைத்த வெண்ணெய் கட்டி போல் உருகி உருகி காதலிப்பார்கள் பாப் பாடலில் வருபவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்