கதை விடுறாங்க!

சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த செந்திலின் மீது யாரோ எதையோ எறிந்தார்கள்.

- இந்த வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய கதைகள் இதோ...!

ஆஷிக்: அது ஒரு துண்டுச்சீட்டு. அதை எடுத்துப் பார்த்தால் ‘அன்புமணி ஆகிய நான்’ என்று எழுதி இருந்தது. கடுப்பாகி தூக்கிப் போட்டான்.

திலீபன்: திரும்பிப் பார்த்தால் செங்கல் சைக்கோ. அப்புறம் என்ன, லேசான காயத்துடன் தலைதெறிக்க ஓடினான் செந்தில்.

இளந்தமிழ்: செந்தில் மீது வந்து விழுந்த அந்த ஃபைலை எடுத்துப் பார்த்தான். அது ஒரு இன்ஜினீயரிங் படித்தவனின் ஃபைல். போன வாரம்தான் அவனும் வேலை கிடைக்காத விரக்தியில் தன்னுடையதையும் தூக்கி எறிந்தான். ‘இன்னும் எத்தனைப் பேர் இந்த மாதிரி பண்ணப்போறாங்களோ...’ என்று எண்ணிக்கொண்டு அதைத் தூக்கி ஓரமாகப் போட்டுவிட்டு நடந்தான்.

ஆதி: அது சீமான் போட்ட பேப்பர். அதில் ‘என் முப்பாட்டன் முருகன்டா... இப்படிக்கு சீமான்’ என்று எழுதியிருந்தது. திரும்பிப் பார்த்தால் சீமான் காவடி தூக்கிக்கொண்டு தனியே நடந்து போய்க்கொண்டிருந்தார். இதைப் பார்த்த செந்தில் கண் கலங்கினான்.

புகழேந்தி: நடந்துகொண்டிருந்த செந்தில் மீது ஒரு பேப்பர் பந்தாக மடிக்கப்பட்டு விழுந்தது. அதில், ‘2021-ல் நாம் அமைக்கப் போகும் கூட்டணி கண்டிப்பாகக் கோட்டையைப் பிடிக்கும். இப்படிக்கு - வைகோ’ என்று எழுதியிருந்தது.

வீரமணி: அது கிரிக்கெட் பந்து. நட்சத்திர கிரிக்கெட் விளையாடியவர்கள் யாரோ பெளலிங் போட்டு இங்கே வந்து விழுந்துவிட்டது.

யுவராஜ்: திரும்பிப் பார்த்தால் தீவிரவாதி. அவன் எறிந்ததோ கை எறிகுண்டு, அத்தோட அவன் கதையும் எண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்