வேலையில்லாதவன்டா!

நாட்டுல இந்தப் பட்டதாரிகள் தொல்லை தாங்க முடியலை பாஸ். போனவாரம் புரொஃபெஷனல் கூரியர்ல இருந்து பார்சல் கொண்டுவந்த பையன்கிட்ட என்ன படிச்சிருக்கேன்னு கேட்டா, சைடுல பாத்துக்கிட்டே பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் வித் ஃபர்ஸ்ட் க்ளாஸ்ங்குறான். நம்மை மாதிரி வேலையில்லாப் பட்டதாரிகள் பட்டியல் அதிகமாகிட்டே போகுது. எந்தப் பக்கம் போனாலும் ஈசியா கலாய்க்கிறாங்க... தேவையில்லாம அசிங்கப்படக் கூடாதுனு சில டிப்ஸ்...

மறந்தும்கூட இந்தச் சொந்தக்காரய்ங்க வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் போகவே கூடாது. பாசமா கூப்பிடுற மாதிரி கூப்பிட்டு ‘அப்புறம் தம்பி... கேம்பஸ் இன்டர்வியூவில செலெக்ட் ஆகலையா?’ என நம் முறைப்பெண்களுக்கு முன்பாக இமேஜை டேமேஜ் செய்வார்கள்.

‘சும்மாதானடா இருக்கே... அண்ணாச்சி கடைக்குப் போய் தயிர் பாக்கெட் வாங்கிட்டு வா’ என அம்மாக்கள் வார்த்தையால் ஆசிட் அடிப்பார்கள். சரி, நாமளும் சும்மாதானே இருக்கோம். அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நெனச்சு கடைக்குப் போனா, அங்கே பக்கத்து வீட்டு, பக்கத்துத் தெரு அங்கிள், ஏன்? பக்கத்து மாநில ஆன்ட்டி வரைக்கும் ‘என்னப்பா படிச்ச பையன் வேலைக்குப் போகாம, இப்படித் திரிஞ்சுக்கிட்டு...’ என உச்சுக்கொட்டுவார்கள். ( ஏன்டா... தயிர் பாக்கெட் வாங்க வந்தது ஒரு குத்தமா?)

வாரக் கடைசியில் விளையாடப் போய் பழக்கமான ஸ்கூல் பையன்கள் திடீரென கால் பண்ணி ‘அண்ணா... ராயபுரம் ராக்ஸ்கூட மேட்ச் இருக்குணா. வெட்டியாதான கீறே. வந்துட்டுப் போண்ணா’ என வெறுப்பேற்றுவார்கள்.

நம்மைப் போலவே வேலையில்லாமல் திரியும் நண்பர்களோடு சேர்ந்து பீச், பார்க், சினிமா என எங்கே சென்றாலும் தெரிந்தவர்கள் எல்லாம் ‘ஒதவாக்கரைகள்’ எனப் பட்டப் பெயர் வைத்து அடிவயிற்றில் பற்றவைப்பார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்