பதில் சொல்லுங்க பாஸ்!

ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்...

‘தமிழகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க-வுடன் இணைந்து பணியாற்றத் தயார்’ என்ற ஜெயலலிதாவின் அறிக்கையைப் படித்தபோது கருணாநிதியின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும்?

மோகன்: நான் யார்னு உனக்குத் தெரியும், நீ யார்னு எனக்குத் தெரியும். நம்ம ரெண்டு பேரும் யார்னு இந்த ஊருக்கே தெரியும். எங்கிட்ட இந்த டகால்டி வேலை எல்லாம் வேண்டாம்.

சுரேஷ்: பாம்புக்கு பாயா போட்டாலும் சரி, பால் ஊத்துனாலும் சரி அது பணியவே பணியாது.

ஆதி: அய்யோ... பெருசா ஏதோ ப்ளான் பண்ணுதே இந்த அம்மா. எதுக்கும் உஷாரா இருப்போம்.

ப்ரின்ஸ்: ‘கண்டிப்பா நாளைக்கு இதை வெச்சு டைம்பாஸ்ல கொஸ்டீன் கேட்பாய்ங்களே’னு நினைச்சுருப்பார்.

செந்தில்: என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலியே?

கோமாளி கிறுக்கன்: ‘ஏது பந்த பாசம்... எல்லாம் வெளிவேஷம்... காசு பணம் வந்தா நேசம் சில மாசம்... சொந்தமே ஒரு வானவில், அந்த வர்ணம் கொஞ்ச நேரம்.’

இளங்கோ: ‘சொல்லாதையும் செய்வோம்’னு சொன்னது இதைத்தானா?

‘மக்கள் நலக் கூட்டணியைவிட குறைவாக என் கட்சி வாக்குகள் வாங்கினால் நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்துவிடுவேன்’ என்று சவால்விட்ட சீமான் ஏன் இன்னும் சி.பி.எம்-மில் சேரவில்லை?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்