சினிமா விடுகதை!

ண்ணழகுப் பொண்ணு கலக்குச்சே நின்னு... கண்ணழகி மீனா, நடித்த படங்களைக் கண்டுபிடி கண்ணு!

1. ‘மவராசன் போல புருசன் ஒருத்தன் கிடைக்கணும்... நான் செத்தே போனாலும் தூக்கிக்கொண்டு பொதைக்கணும்’னு ஒரு தலைமுறைக்கு முன்னால பொண்ணுங்க பல பேரைப் புலம்ப வெச்ச படம். ‘கிளியே’னு கிளிசரின் போடாமலே அழ வெச்சதே அம்மணி. ஃப்ளாஷ்பேக் போய் கண்டுபிடிங்க பாப்போம்!

2. அங்கிள்னு சொன்ன ஆளை மாமானு கூப்புட்டுச்சே! ‘புள்ள வரம் இல்லை’னு  பொசுக்குனு உயிரைவிட்டு கண்ணக் கசக்கவிட்ட தாயே! பல்லு வெளக்கியே தலைவரோட வாயை வீங்க வெச்ச ஆளை ஒருநாளும் மறவாத வரம் வேணும்தானே. இதெல்லாம் நடந்த படம் எது?

3. பசுபதிக்குப் பொண்டாட்டினா சும்மாவா? ஆலமரத்துக்குக் கீழ சொம்பை வெச்சுக்கிட்டு பஞ்சாயத்து பண்ணுவாரே அவர் யாருன்னு கண்டுபிடிச்சா விடை கிடைச்சுடுமே! படத்துல பஞ்சாயத்துல கில்லியா நின்னாலும் தேர்தல்ல மக்கள் தீர்ப்பை மாத்திச் சொல்லிட்டாங்களே! சரி இந்த மீனா பொண்ணு மாராப்பை மாத்திப் போட்ட படம் எது?

4.  நாடகப் பேரழகி ரங்கநாயகிக்கு ஜப்பான்லேயும் ஜாக்கி சான் ரசிகர்கள் மன்றம் வெச்சாங்க. ‘தும்மல், இருமல், விக்கல், கொட்டாவி, அரசியல்’ பற்றித் தெரிஞ்சா மூணெழுத்துப் படத்தோட பேரை நின்னு ‘தில்’லா(ன) சொல்லுவீங்க! சொல்லுங்க பார்ப்போம்.

5.  மன்னர் இயக்குநரின் ‘பொன்’னான படம். ‘கால’த்தைச் சொன்னாலும் காதலைச் சொல்லாமலே பொத்தி வைக்கிறவர்தான் இந்தப் படத்துக்கு ஹீரோ. மன ஊனத்தைப் பேசின படத்துல அழகி மீனாவை ‘வெறும் பொம்மை இல்ல உண்மை’ நடிகைனு புரிய வெச்சதே கதை! என்ன படம் பாஸ்?

6.  சந்தோஷம் டைட்டிலில் பாதியா இருக்கு. ‘செம்மீனா...விண்மீனா’னு ‘தல’ய ஏங்க வெச்ச படத்துல கல்யாணம் ஆகாமலே கைம்பெண்ணா வாழ்றதெல்லாம் தியாகம் நம்பர் ஒன் பாஸ். ‘காற்று’ வாக்குல இன்னொரு நடிகரும் நடிச்ச படம் என்ன படம்?

7.  ‘தப்புப் பண்ணா சாமி கண்ணைக் குத்தும்.’ ஒரு பச்சப்பிள்ளையைக் காப்பாத்த சாமி டீச்சராகி பாத்திருக்கீங்களா...பாத்திருக்கீங்களா? பாத்திருந்தா பட்டுனு சொல்வீங்க, ஊர் ஊரா கூழ் ஊத்த வைக்கிற  இந்த அம்மனை. ராமநாராயணன் டைரக்டர்னு சொல்லியாச்சு.. பதில் எங்கே?

8.  மீனாவைப் பார்த்து நம்ம கேப்டனையே தெறிக்கவெச்ச சினிமா. நட்பு இயக்குநரின் செம பாஸிட்டிவ் சினிமானா சும்மாவா? 2000 பொறந்தப்ப வந்த தெறி ஹிட் தமிழ் ஹிட் படம்னு சொன்னா ஈஸியா சொல்லிடுவீங்க. அதை சொல்றதுக்குக்கூட இந்தப் படத்தோட பேரு போலவே மனசு வேணுமே பாஸ்!

விடைகள் : 1. என் ராசாவின் மனசுல 2. எஜமான் 3. நாட்டாமை 4. முத்து 5. பொற்காலம் 6. ஆனந்தப் பூங்காற்றே 7. பாளையத்து அம்மன் 8. வானத்தைப் போல

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்