இவரும் தனி ஒருவனே!

துணைக்கு ஒருவர்கூட இல்லாமல் யாருமே இல்லாத காட்டில், தனியாக வாழ்வதற்கான தில் இருக்கிறதா உங்களுக்கு?

‘என்னது தனியாவா...அய்யய்யோ சான்ஸே இல்லை’னு சொல்லாம ஒரு காட்டில் ஒருவர் மட்டும் 10 வருடங்களாகத் தனியா வாழ்ந்துட்டு இருக்கார்.பீலால்லாம் விடாதீங்க பாஸ்.. இதெல்லாம் நடக்கிற காரியமா என்று நீங்கள் கேட்டால் அப்போ நீங்க சீனாவுக்குதான் போகணும். வடமேற்கு சீனாவில் இருக்கிறது ‘ஸ்வான்ஷான்ஷீ’ என்னும் கிராமம். இந்தக் கிராமத்தில் கடந்த 10 வருடங்களாகத் தனியே தன்னந்தனியே தனிக்காட்டு ராஜாவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் லியுஷென்ஜியா.

‘சொந்த பந்தமெல்லாம் இல்லாமல் இப்படி எதுக்கு பாஸ் தனியா வாழுறீங்க?’ என்று கேட்டால், தன் லைஃப் ஹிஸ்டரியை அலுத்துக் கொள்ளாமல் அவிழ்த்துவிடுகிறார்.

முன்பு 20 குடும்பங்கள் வாழ்ந்த இந்தக் கிராமத்தில் விளைச்சல் இல்லாமல் உணவுப்பொருட்களின் உற்பத்தி படிப்படியாக குறைய ஆரம்பித்தது.வறட்சியின் காரணமாகவும், வயதான காரணத்தாலும் ஒவ்வொருவராக இறக்க ஆரம்பிக்கக் கடைசியாக லியுவின் தாயும், சகோதரனும் இறந்து போனார்கள். தன் குடும்பம் வாழ்ந்த ஊரைவிட்டு வெளியேற முடியாத லியு அங்கேயே தனியாக வாழ ஆரம்பித்தார்.

‘ஊன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னு காட்டுநாய்கள் கத்தும். ஆரம்பத்துல எனக்கு பயமா இருக்கும். அப்புறம் அதுவே எனக்குப் பழகிடுச்சு’ என்று சொல்லும் லியுவிற்கு 20 செம்மறி ஆடுகள் இப்போது தோழர்களாம். உணவே கிடைக்காத ஊரில் லியுவால் எப்படி வாழ முடியும்? தன் வாழ்வாதாரத்துக்காக பல மைல்கள் தொலைவு நடந்துபோய் வனத்துறையில் பாதுகாவலராகப் பணி புரியும் லியு மாதத்திற்கு 700 யுவான் சம்பாதிக்கிறார். இந்தப் பணத்தை வைத்துதான் தனக்குத் தேவையான உணவு, உடை எல்லாவற்றையும் வாங்கிக்கொள்கிறார்.

‘அது அதுக்குனு ஒரு நேரம் வரணும். அப்படி வரும்போதுதான் மக்களோட மக்களா வேறொரு மாகாணத்துல சேர்ந்து வாழ்றது பற்றி யோசிக்க முடியும்’ என்கிறார் லியு, செம கூலாக.

இந்த அரசியல்வாதிங்க தொல்லையெல்லாம் அவருக்கு இருக்காதுல்ல!

-பொன்.விமலா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick