மியாவ் மியாவ் பூனைக்குட்டி!

லிஸ் க்ளார்க், 34 வயதான ஆச்சரியப் பெண்மணி. பத்து வருடங்களுக்கு முன்பு, கலிஃபோர்னியாவில் உள்ள சான்டியாகோவில் உள்ள ஒரு மதுக்கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர் திடீரென அந்த வேலையை விட்டுவிட்டார். ஒரு படகை எடுத்துக்கொண்டு உலகம் சுற்ற ஆரம்பித்துவிட்டார். 2013-ம் ஆண்டு க்ளார்க் அவரது சாகசப் பயணங்களை ஆவணப்படுத்தி தர வேண்டும் என்ற நிபந்தனையோடு வேர்ல்டு இன் என்னும் குழுவினர், அவருக்கு கால் 40 எனும் படகை அளித்தனர். அதை வைத்துக்கொண்டு தான் வளர்த்துக்கொண்டிருக்கும் பூனை ‘அமெலியா'வோடு இன்று உலகையே சுற்றி வருகிறார்.

ஆரம்பத்தில் க்ளார்க்கைப் பார்க்கும்போதெல்லாம் ஜெர்க் ஆகிக்கொண்டிருந்த அமெலியா, இப்போது அவருடன் நன்கு பழகிவிட்டது. படகிற்குள்ளேயே ஓடியாடி, குதித்து விளையடிக்கொண்டு பிடிக்கப்பட்ட மீன்களை சாப்பிட்டுக் கொண்டும் மகிழ்ச்சியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறது அமெலியா. பூனையோ நீரைப் பார்த்தாலே அரண்டு ஓடும் என்பார்கள், ஆனால் அமெலியா அப்படியெல்லாம் இல்லை. ‘கேப்டன் லிஸ் க்ளார்க்' எனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பயணங்களின்போது எடுத்த புகைப்படங்களை அப்லோடி வருகிறார். அதில் குறிப்பாக அமெலியாவின் புகைப்படங்களுக்கு லைக்ஸ் அள்ளுகிறது. இது பிரபலமாகவே பிறந்த பூனை பாஸ்!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick