சினிமால்!

பிரியங்கா சோப்ரா என்பதற்கு டிக்‌ஷனரியில் பணமழை என்றுதான் பொருளோ? என்று யோசிக்கும் அளவுக்கு பிரியங்கா காட்டில் கனமழை. பல கோடி சம்பளம் வாங்கி ஹாலிவுட் படத்தில் நடித்துவரும் பிரியங்கா, பாலிவுட் பச்சன், கான் நடிகர்களுக்கு இணையாக விளம்பரப் படங்களில் சம்பாதித்தும் வருகிறார். அடுத்த 40 நாட்கள் விளம்பரப் படம் நடிக்க மட்டுமே தன் தேதிகளை ஒதுக்கியிருக்கும் பிரியங்கா, மொத்தம் 24 விளம்பரங்களில் நடிக்க 100 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம். ஒரு வினாடிக்கு 300 ரூபாய் சம்பளம், அம்மாடியோவ்!

தமிழ் சினிமாவில் நெல்லைத்தமிழ், கொங்கு தமிழ், சென்னைத்தமிழ் என எல்லாவிதமான தமிழையும் பேசி நடித்தவர்கள் கமல் போல சிலர் மட்டுமே. இந்நிலையில் விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் நெல்லைத்தமிழ் பேசி நடித்து வருகிறாராம். நெல்லைத்தமிழை அச்சுப் பிசகாமல் பேச, பயிற்சி கொடுக்க தன் ரசிகர் ஒருவரையே தனக்கு குருவாக நியமித்துவிட்டாராம் விஜய். தெறி பேபி!

சமீபத்தில் வெளியான ‘சரப்ஜித்’ படம் ஐஸ்வர்யா ராயின் கேரியரில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் அடுத்து ஒரு படத்தில் மாபியா கும்பலின் தலைவியாக நடிக்கிறாராம். ‘நீர்ஜா’ படத்தை இயக்கிய ராம் மத்வானி இயக்கும் இந்தப் படம் ஒரு டச்சுத் தொலைக்காட்சித் தொடரின் தழுவலாம். மாபியா கும்பல் தலைவனான தன் கணவன் இறந்துவிட, கணவனின் இடத்தில் தான் மாபியா தலைவி ஆவதுதான் கதையாம். காட் மதர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்