“ஹீரோ ஆகணும்னு நினைச்சேன். வில்லன் ஆகிட்டேன்!”

ருப்பு தாடிக்குள் கொஞ்சூண்டு சதை தெரிய சிவப்புக் கண்களால் மிரட்டுகிற வில்லனாய் ‘மருது’வில் திரையிலிருப்பவர்களையும் தாண்டி, பார்வையாளர்களையும் மிரளவைத்த வில்லன் ஆர்.கே.சுரேஷ்.

‘‘ ‘புதுப்பேட்டை’ படத்துல உங்களுக்கு நடிக்க சான்ஸ் வந்ததாவும் நீங்க மறுத்துட்டதாவும் செய்தி வந்ததே. என்ன வேஷம். ஏன் மறுத்தீங்க?''

‘‘செல்வராகவன்ணன் படத்துக்கு ஆடிஷன் நடக்குதுனு போய் வரிசையில் நின்னேன். ’செலெக்ட்’ ஆகிட்டப்பானு மேனேஜர் கூப்பிட்டு 2,500 ரூபாய்க்கு செக் கொடுத்தாங்க. அப்பாகிட்ட வந்து சொன்னேன். ‘என்ன வேஷம்னு கேட்டியாடா’ன்னார். போய் அடுத்தநாள் கேட்டேன். அடியாட்கள்ல ஒருத்தன் மாதிரின்னாய்ங்க. கொஞ்சமாச்சும் முக்கியமான கேரக்டர்னா ஓகேன்னு வந்துட்டேன். இப்பவும் செல்வராகவன்ணன் கூப்பிட்டா நடிக்கட் தயாராத்தான் இருக்கேன்.''

‘‘நீங்க மோடி ஆதரவாளர். பி.ஜே.பி ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கலையே... அதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?''

‘‘மோடியை ரொம்பப் பிடிக்கும். அப்பா சிவசேனாவில் பொறுப்புல இருந்தார். அவரோட கருத்துகள், செயல்பாடெல்லாம் பிடிக்கும். அவ்ளோதான். மத்தபடி எனக்கு அரசியல் ஆர்வம்லாம் சுத்தமா இல்லை.’’

‘‘ஹீரோவா நடிக்கணும்னு வந்ததா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தீங்க. இப்போ வில்லன்... இதை எப்படிப் பார்க்கிறீங்க?''

‘‘நான் ஃபைட் கத்துக்கிட்டேன். ஹார்ஸ் ரைடிங் கத்துக்கிட்டேன். டான்ஸ்ல ஃபோக், வெஸ்டர்ன், ஹிப் ஹாப்னு மூணு வகையும் வேற வேற மாஸ்டர்ஸ்கிட்ட கத்துகிட்டேன். கேரளா போய் பல மாசம் தங்கி நடிப்பு கத்துகிட்டேன். கடந்த பல வருஷங்களா பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்னு சான்ஸ் கேட்டு படிப்படியா ஏறியிருக்கேன். இப்போ பாலா அண்ணன் கண்ல வில்லனா பட்டு, வெளியில வந்திருக்கேன். இந்த இடம் இப்போ இருக்கு. கெட்டியா பிடிச்சுக்க வேண்டியதுதான்.''

‘‘சாதி, வன்முறை இதெல்லாம் சரியா?''

‘‘படம் ரிலீஸாகி அஞ்சு நாளுக்கு மேல இன்னும் கொண்டடுறாய்ங்க. தென் மாவட்டத்துல போய்ப் பாருங்க. ‘பருத்திவீரனுக்கு அப்றம் இந்தப் படம்தான் சார் ஃபுல்லா போகுது. ஊர் ஊரா டிராக்டர்ல ஏறி வர்றாங்க. நீங்க சொல்ற இந்த விஷயங்களை சொல்றதுக்கு ஆள் வேணும்ல சார்?  முத்தையா அண்ணன் எழுதிக் கொடுக்க, விஷால் சார் மாதிரி ஒருத்தர் பேசுறப்போ கொண்டாடுறாய்ங்க. நானும் விஷாலும் கருப்பா, மண் சார்ந்த ஆளுகளா இருக்கிறதால எடுக்குது. இப்போ நான் சொல்ற ‘ஏய்.. என்னாது’ இந்த நொடியில 2000 பேர் சொல்லிட்டிருப்பான். அதை சினிமாவில் கொண்டு வந்தோம்!”

- பரிசல் கிருஷ்ணா, படம் : வி.செந்தில்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick