பேர் சொல்லப் பிரபலங்கள்!

ரு பிரபலம் இன்னொரு பிரபலத்தின் ரசிகர்னு சொல்லி காலத்தை ஓட்டும்  வேலையைப் பல பேர் பார்த்திருக்காங்க. இவங்கதான் அவங்க.

பாலிவுட் பாதுஷா என அழைக்கப்படும் ஷாரூக் கான் சினிமாவில் ஃபேனாக நடிக்கிறார். அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நிஜ வாழ்க்கையிலும் ஃபேனாக நடிக்கிறார். ஷாரூக் கான் தன்னை ரஜினியின் ரசிகன் என்று அடிக்கடி காட்டிக்கொள்வார். அதைப் பார்க்கும்போது அடடா எவ்வளவு பெரிய ஸ்டார்? நம்ம ரஜினியைப் பார்த்து ‘தலைவா நான் உங்க ரசிகன்’ என்று சொல்கிறாரே என்று வியந்து பாராட்டுவார்கள். இதை நல்லா கவனிச்சுப் பார்த்தா ஓர் உண்மை தெரியும். அதாவது ஷாரூக் கானின் படங்கள் இந்தியைத் தாண்டி தமிழில் ரிலீஸாகும் ஒவ்வொரு முறையும் அவருக்கு ரஜினியின் மேல் பாசம் பொங்கும். பாலிவுட்டைப் போல கோலிவுட்டிலும் தன்னுடைய படம் தாறுமாறாக கலெக்‌ஷனைக் கொட்ட வேண்டும் என்று  ஷாரூக் கான் ஆடும் மங்காத்தா கேம் என்பது தெரியுமா பாஸ்? அவர் ரஜினிக்கு லுங்கி டான்ஸ் டெடிகேட் பண்ணும்போதே நாம உஷாராகியிருக்கணும். அடுத்து சல்மான் கான் நான் கமல் ரசிகர்னு சொல்லிக்கிட்டு இந்தப் பக்கம் வந்தாலும் வருவார்.

அஜித் பெயரைச் சொன்னால் கைத்தட்டல் வரும் என்பது எல்லோருக்கும் நல்லாத் தெரிஞ்சுருக்கு. சிம்பு, தனுஷ், சூர்யா, ஆர்யானு பல பேர் அஜித் பெயரைச் சொல்லி கைத்தட்டல் வாங்கியிருக்காங்க. அப்போ ஹீரோயின்கள் மட்டும் என்ன சும்மாவா... நீங்க யாருக்கு ஜோடியா நடிக்க ஆசைப்படுறீங்க?னு கேட்கும்போது அஜித் சார்னு சொல்லாத ஹீரோயின்ஸ் தமிழ் சினிமாவில் ரொம்ப ரொம்ப கம்மி.

ரெஃபரென்ஸுக்காகவே நேர்ந்துவிடப்பட்டவர் டி.ராஜேந்தர்தான். இவருடைய படங்களில் வந்த பாடல்கள், வசனங்களைப் பயன்படுத்தாதவர்களே இல்லை. குறிப்பாக இவரின் வாய்ஸ் மாடுலேஷனில் நிறைய ஹீரோக்கள் பேசியிருக்கிறார்கள். ‘நீங்க எப்படி என்னுடைய டண்டணக்கா வார்த்தையை யூஸ் பண்ணலாம்’னு ‘ரோமியோ ஜூலியட்’ டீமுடன் கொஞ்ச நாள் முன்னே மல்லுக்கட்டிய டி.ஆர். கடைசியில் சமாதானம் ஆனார். சத்யராஜ் எம்.ஜி.ஆர் இமிடேஷன். தன்னுடைய படங்களில் எம்.ஜி.ஆரைப் போலவே நடப்பது, ஓடுவது, குதிப்பது, பென்சிலில் மீசை வரைஞ்சுக்கிறது, ஒரு கர்லாகட்டையைக் காட்டி இது புரட்சித் தலைவர் எனக்கு கொடுத்ததுனு பெருமையா சொல்றதுனு ஏகப்பட்டது இருக்கு!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick