ஆஃப் த ரெக்கார்டு!

திமிர் நடிகர் சமீபத்தில் தன் ஒவ்வொரு அசைவையும் விளம்பரப்படுத்துவது பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என எல்லோரையுமே கடுப்பாக்கி இருக்கிறதாம். இது செய்தார், அது செய்தார், காயத்தோடு, வலியோடு நடித்தார் என அவர் செய்யும் அலப்பறை தாங்காமல் சில ஹீரோக்களே புலம்புகிறார்களாம்!

பன்ச் நடிகர் தற்போது நடித்துவரும் படத்தின் டெக்னீஷியன்களுக்குள் முதல் நாளில் இருந்தே கருத்து வேறுபாடாம். சில நாட்கள் கழித்து லேட்டாக இதைத் தெரிந்துகொண்ட நடிகர், இது நம்ம படம், நல்ல படமா வர எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வேலை பார்க்கணும் என்று அட்வைஸ் செய்தாராம்!

புயலான காமெடி நடிகர்  ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற தன் கொள்கையைத் தளர்த்தி, காமெடியனாகவும் நடிக்க ஆரம்பித்திருப்பது பல இளம் காமெடியன்களுக்குத் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறதாம். இதனால் படப்பிடிப்பில் ஹீரோக்களிடமும், இயக்குநர்களிடமும் நல்ல பெயரைத் தக்கவைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்களாம்!

காமெடி இளம் ஹீரோ தன் மார்க்கெட் ரேஞ்ச் என்ன எனத் தெரிந்துகொள்வதற்காக, கொஞ்சகாலத்திற்கு எந்தத் தயாரிப்பாளருக்கும் கால்ஷீட் கொடுக்கக் கூடாது என முடிவெடுத்திருக்கிறாராம். அப்படியும் கால்ஷீட் கேட்டுவரும் தயாரிப்பாளர்களிடம் தல-தளபதி சம்பளத்துக்கு இணையாக சம்பளம் கேட்டு எஸ்கேப் ஆகிறாராம்!

சமத்தான நடிகை, தான் ஓர் இளம் நடிகரைக் காதலிக்கிறேன், விரைவில் திருமணம் செய்துகொள்வேன் என அறிவித்தார். இதைக் கேள்விப்பட்ட அந்த வாரிசு இளம் நடிகரின் பாரம்பரிய திரைக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரொம்பவே கடுப்பாகி விட்டார்களாம். நடிகையை அழைத்து டோஸ் விட்டார்களாம்!

இறுதிச்சுற்றை முதல் சுற்றாக்கி ரவுண்டு வர ஆரம்பித்திருக்கும் நடிகை, அம்மாதான் கதை கேட்பாங்க, படப்பிடிப்பில் ஜிம் வசதி வேணும், பயிற்சியாளர், உதவியாளருக்கு ரூம், சம்பளம் தனியா தரணும், அப்பா ஃபிக்ஸ் பண்ற சம்பளத்தைக் கொடுக்கணும் என ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுகிறாராம். இதனால் தயாரிப்பாளர்கள் ஓட்டம் பிடிக்கிறார்களாம்!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்