லிட்டில் ஜான்!

ந்த ஊரில் யாராவது திருட்டுத்தனமாக ‘அந்தத்’ தவறை செய்தால், அங்கு இருக்கும் ஊர்ப் பெரியவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தினமும், பலர் வந்து அந்தக் காரணத்தைச் சொல்லி மன்னிப்புக் கேட்க, கடுப்பானார் பெரியவர். இனி, இந்தக் காரணத்தை யாரும் சொல்லக் கூடாது என உத்தரவிட்டார். அதைக் காரணமாகச் சொல்லாமல், அதற்குப் பதிலாக கீழே விழுந்துவிட்டோம் எனச் சொல்லி வந்தனர். ஆண்டுகள் கழிந்தன. ஊர்ப் பெரியவருக்குப் பின் அவரது மகன் அந்தப் பொறுப்புக்கு வந்தார். ஆனால், கீழே விழுவது மட்டும் குறையவில்லை. ஊர்ப் பெரியவரின் மகன் லிட்டில் ஜானிடம், ‘‘நம்ம ஊர்ல ஏன் எல்லோரும் அடிக்கடி கீழே விழுகிறார்கள்?’’ என்றார். அர்த்தம் புரிந்த லிட்டில் ஜான் சிரிக்க ஆரம்பித்தான். “எதுக்கு சிரிக்கறீங்கனு தெரியலை, உங்க மனைவி இந்த வாரம் மட்டும் மூணு முறை கீழே விழுந்து இருக்காங்க’’ என்றார் பெரியவரின் மகன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்