டங் ஸ்லிப் ஆகுதா?

வாய் குழறாம நாக்கைச் சுழட்டிக் கஷ்டப்பட்டுப் பேசுற வாக்கியங்களை இங்கிலீஷ்ல ‘Toungue twisters’னு சொல்ற மாதிரி தமிழ்ல ‘நா நெகிழ் சொற்றொடர்கள்!’ எக்கச்சக்கமா இருக்கு. அதுல கொஞ்சத்தை இப்போ சத்தமா சொல்லி நாக்கை உருளவிடுங்களேன்...

ப்ளூ லாரி உருளுது புரளுது.

கிழட்டுக் கிழவன் சடுகுடு விளையாட, குடுகுடுவென ஓடி வாழைப்பழத்தோலில் வழுக்கி விழுந்தான்.

இது யாரு தச்ச சட்டை? எங்க தாத்தா தச்ச சட்டை.

ஓடுற நரியில ஒரு நரி கிழநரி; கிழநரி முதுகுல ஒரு முடி நரைமுடி.

குலை குலையாய் வாழைப்பழம் மலையில் அழுகிக் கீழே விழுந்தது.

ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை; தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கலை.

வீட்டுக்கிட்ட கோரை; வீட்டுக்கு மேல கூரை; கூரை மேல நாரை.

சரக்கு ரயிலைக் குறுக்கு வழியில் நிறுத்த நினைத்த முறுக்கு மைனர் சறுக்கி விழுந்தும் முறுக்கு மீசை இறங்கவில்லை.

பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால், எந்தப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியர் வந்து அந்தப் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?

கருகும் சருகும் உருகும் துகிரும் தீயில் பட்டால்.

கொக்கு நெட்டக் கொக்கு; நெட்டக் கொக்கு இட்ட முட்டை கட்ட முட்டை.

இவ்வளவு ஏன்? இந்த ரெண்டு வார்த்தையைச் சொல்லிடுங்க, பாக்கலாம். லோடு ரோலர்.

ரொம்பக் கஷ்டமா இருக்குப்பா!

- விக்கி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick