சாப்பிடும்போது எதுக்குய்யா தத்துவம்?

ஹோட்டலில் சாப்பாடு ஆர்டர் செய்து, காத்திருக்கும்போது மனதுக்குள் சில தத்துவங்கள் எழுந்துச்சு. அதை உங்களுக்கு சுடச்சுட இங்கே பரிமாறுகிறேன்...

பத்துப் பக்க மெனுகார்டை முழுவதும் படிக்கும் வாய்
கடைசியாக ஆர்டர் செய்வது இட்லி/தோசையைத்தான்.

குஸ்காவில் கிடக்கும் சின்ன சிக்கன் பீஸ் தரும் சந்தோஷம்
சிக்கன் பிரியாணியில் கிடக்கும் லெக்-பீஸாலும் தர முடியாது.

ஒரு ஹோட்டலின் தரம், இலையைத் தூக்கிப் போடுவதிலும்,
தூக்கிப் போடச் சொல்வதிலும்தான் வேறுபடுகிறது.

கரண்டியைக்கொண்டு உளுந்துவடை சுடும் மாஸ்டர்
அந்த வடையின் நடுவில் உள்ள துளையை அறியாதவர்.

கவனிப்பு நன்றாக இருக்க வேண்டும் என எண்ணினால்
சப்ளையரை விட நல்ல சட்டை அணிவது முக்கியம்.

ஹோட்டலின் சமையலறையை எட்டிப்பார்ப்பவனால்
தண்ணீர்கூட நிம்மதியாகக் குடிக்க முடியாது.

பெருமையும், அவமானமும் நாம் நினைத்துக் கொள்வதிலேயே உள்ளது என்பதை
நட்சத்திர ஹோட்டல்களில் உணவை கையில் எடுத்து சாப்பிடும்போது அறியலாம்.

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick