திரும்பத் திரும்பப் பேசுறே!

ஃபேஸ்புக்கில் பலர் போடும் கமென்ட்டுகள் பெரும்பாலும் ‘அரைச்ச சாம்பார் பொடியவே அரைச்ச ரகம் தான்’. எப்படினா...

ஃபேஸ்புக்கில் ஒரு கெட்ட செய்தியைப் பார்த்துவிடக் கூடாது. உடனே ‘இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாப் போகட்டும்’னு சாபம் விட்டு சாப்பிட எழுந்து போயிடுறது. அதற்கு ‘இந்த நாடும் நாட்டு மக்களும் எந்தக் கவலையுமின்றி சந்தோசமாக இருக்கட்டும்’னு பாஸிட்டிவ் பாயசம் கிண்டலாமே?

‘ஈட்டிங் கல்கோனா (எ) கமர்கட்டு’ என ஜாலி ஸ்ட்டேடஸ் போட்டாலும், அங்கு ஒரு குரூப் வரும். வந்து ‘ நாட்டில் எத்தனையோ பிரச்னை இருக்கு, இப்போ இதுதான் ரொம்ப முக்கியம்’ என கமென்ட் போடுவார்கள். கடைசியில் ‘ஊர்ல நடக்கிற அம்புட்டு பிரச்னைக்கும் நாம கல்கோனா சாப்பிட்டதுதான் காரணம்’ எனக் குற்றம் சுமத்திவிட்டுக் கிளம்பிவிடுவார்கள்.

‘ஒரு கொலைகாரன் மீது கோப்படும் நாம்தான், வீட்டில் கொசுவர்த்தி ஏற்றி கொசுக்களை கொல்கிறோம்’ங்கி்ற மாதிரி கப்பித்தனமான ஸ்டேட்டஸைக் கூட ஒரு பொண்ணு போட்டுவிடக் கூடாது. உடனே காண்டாமிருகத்துக்கு காது வியர்த்த மாதிரிக் கிளம்பிவந்து ‘சாட்டையடிப் பதிவு தோழி’்ங்கிற ஒரே கமெண்டை ஒன்பது பேர் போடுவாங்க. கொசுத் தொல்லை...

சிலர் என்னைப் போன்று குறியீடெல்லாம் வைத்து காமெடி பண்ணுவார்கள் ( கேட்கும்போதே சிரிப்பு வருதுல்ல... இந்த மாதிரிதான்).  ஆனால், அதைப் புரிந்துகொள்ளாமல் ‘மொக்கை காமெடி’னு ஒரு குரூப் வந்து கடுப்பேற்றும். அவர்கள் ஐ.டி-க்குள் சென்று பார்த்தால், ‘காக்கா ஏன் கருப்பா இருக்கு? ஏன்னா அது வெயில்ல சுத்துதுல்ல... அதுதான்’ என ராம்கி காலத்து காமெடி அடித்திருப்பார்கள்.

சில சமயங்களில், புதிர் கொடுத்து ‘இதற்கான பதிலை கமென்ட்டில் டைப் செய்யுங்கள்’ என சொல்லியிருப்பார்கள். இந்த மாதிரிப் பதிவுகளுக்கு கண்டிப்பா ஒரு பக்கியாவது ‘விடையை கமென்ட்டில் தேடுறவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க’ என கமென்ட் போட்டு ஏழாம் அறிவை யூஸ் செய்து லைக் வாங்கும். அதற்கும் பலர் ‘லைக்’ போட்டிருப்பார்கள். என்னத்தைச் சொல்ல?

இந்த ஒரு கமென்ட் மட்டுமே சம்பந்தமில்லாத இடங்களில், சம்பந்தமில்லாத நபர்களால், சம்பந்தமில்லாத நேரத்தில் போடப்படும். அதுதான், ‘ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடா’. முதலில் சம்பந்தமில்லாமல் இந்த கமென்ட் போடுறதை நிறுத்துங்க, அப்பாலிக்கா எங்களை வந்து திருத்துங்க!

அப்புறம், 30 வரிகளில் என்னத்தையோ காப்பி பேஸ்ட் பண்ணிட்டு கடைசியா ‘இதைச் சொன்னா நம்மளைப் பைத்தியக்காரய்ங்கனுவாய்ங்க’னு கமென்ட் போடுவது. அப்புறம் துபாயில் அந்தத் தண்டனை, துருக்கியில் இந்தத் தண்டனை எனவே நம் நாட்டில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்னு 17 வரிகளுக்கு ஒரு கமென்ட். இதையெல்லாம் எப்பவும் ஒரு குரூப் காப்பி பேஸ்ட் பண்ணிட்டே இருக்கும். ஆனால், இது எல்லாத்தையும் விட கொலைவெறி காப்பி பேஸ்ட் கமென்ட் ‘இலவச ரீ சார்ஜ் கமென்ட்’ தான். நீங்கள்லாம் எங்கே இருந்துய்யா வர்றீங்க?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்