கதை விடுறாங்க!

‘‘எப்போ பார்த்தாலும் ஏண்டா போனில் கேம் விளையாடிக்கிட்டிருக்கே?’’ என்று மகனிடம் கேட்டான் ரோகேஷ். அதற்கு மகன் சொன்ன பதிலைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தான்.

- இந்த வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய கதைகள் இதோ...!

ஆனந்த்: ரோகேஷின் மகன் ‘‘எனக்கும் ஒலிம்பிக்கில் விளையாடி இந்தியாவுக்குத் தங்கம் ஜெயிச்சு கொடுக்கணும்னு ஆசைதான். ஆனா நீங்கதான் படி படின்னு என் வாழ்க்கையில விளையாண்டுட்டீங்களே’’ என்றான்.

இளந்தமிழ்: ‘‘இன்ஜினீயரிங் படிச்சு வேலையா கிடைக்கப்போகுது? அதான் என்னோட திறமைக்கு நானே எனக்கான கனவு மாளிகை கட்டிக்கொண்டிருக்கிறேன்” என்றவாறு  ‘க்ளானை’ காட்டினான்.

சுப்ரமணியன்: “நீங்க என்னோடு விளையாடினால் நான் எதுக்கு போன்ல விளையாடப்போறேன்?” எனக் கேட்டான் ரோகேஷின் மகன்.

மருது: “நம்மளை வெச்சு எவ்ளோ பேர் கேம் விளையாடுறாங்க. அதெல்லாம் கேட்காதீங்க...” என்றான் ரோகேஷின் மகன்.

வால்டர்: ‘‘நீங்க எல்லாம் அபார்ட்மென்ட்டுக்கு ஆசைப்பட்டதாலதான், எங்களுக்கு விளையாட கிரவுண்ட் இல்லாம போன்ல கேம் விளையாடுறோம்’’ என்றான் ரோகேஷின் மகன்.

குலாம்: ரோகேஷின் மகன் “எப்போ பார்த்தாலும் போன்ல ஃபேஸ்புக்கையே நோண்டிக்கிட்டு இருக்கீங்களே... பொண்டாட்டி, புள்ளைங்க இருக்கிற ஞாபகம் இருக்கா உங்களுக்கு’’னு அம்மா கேட்கும்போது நீங்க என்ன பதில் சொன்னீங்க...?” எனக் கேட்டான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்