சினிமா விடுகதை!

ழகில் மனதை அள்ளும் அஞ்சலி நடித்த சினிமாக்கள்தான் இந்த வார சினிமா விடுகதைகளுக்கான விடைகள் பாஸ். ரெடி ஜூட்...

1.    பாடல்களில் மனதை வசீகரித்த சினிமா. வரிவிலக்கிற்காக ‘தமிழ்’ப் பெயருக்கு மாறிய சினிமா. தாடி முளைக்காத ரெண்டெழுத்து ஹீரோவுக்கு தாடி இருந்துச்சே. வட மாநிலத்துக்கும் போன கதையில் நாம சோகமா வாழ ‘கத்துக்க’ முடியுமே! என்ன படம் பாஸ்?

2.    பா.ரஞ்சித்துக்கு பேடன்ட்டாகிப்போன வார்த்தை. சந்தோஷத்தை இப்படியும் சொல்லலாம்னு தெரியுமா மக்களே? ‘நாம் தமிழர்’ நடிச்ச படத்துல கருப்பான ஒருத்தர்தான் ஹீரோ. நாவல் படத்துக்கு ஐந்து எழுத்துல தலைப்பு!

3.    சேட்டைக்காரப் பிள்ளைகளை இப்படியும் சொல்வாங்க. நடிச்ச ரெண்டு ஆண்களை மலை அளவுக்குப் புகழ்வாங்க. ஷங்கர் எடுத்த படத்துக்கு ஓப்பனிங் நல்லா இருந்தும் கலெக்‌ஷன் நல்லா இல்லை. என்ன படம்?

4.    ரங்கநாதன் தெருன்னதும் படம் பேரு ஞாபகம் வருதா? ஆஸ்கர் லிஸ்ட்ல கடைசில கழண்டதும் பட்டுனு மனசுல வருதா? அண்ணாச்சி கடைக்குப் பின்னாடி அழுகாச்சி காவியம் இருக்குனு காட்டிய சினிமா. நம்ம தெரு சினிமா. என்ன சினிமா?

5.    மணிமேகலைக்கு கோபம் ஜாஸ்தி. ஆனாலும் இந்தப் புள்ள தெளிவான புள்ள ஆத்தி. ‘கோவிந்தா கோவிந்தா’னு புலம்ப வெச்ச சென்னைப்பொண்ணு கூட இருந்தும் பார்த்துக்க முடியலை. டெஸ்ட் வெச்சு பையனை செலக்ட் பண்ற மேகலைக்கு லைக் போடலாமே ஃப்ரெண்ட்ஸ்!

6.    ஹோட்டல் பிசினஸைப் பேசவெச்ச ‘மசாலா’ சினிமா. இனிஷியல் இயக்குநரின் காமெடி குருமா. சிரிப்புக்கு இப்படியும் ஒரு பேர் இருக்கு. என்ன படம் இது?

7.    இது இருந்தா தீ மூட்டலாம். அஞ்சலி பாப்பா மூட்டியது காதல் நெருப்பு பாஸ். சின்ன பட்ஜெட் படத்தை பெரிய பட்ஜெட் இயக்குநர் தயாரிச்சார். ஆனா, ஹீரோ பட்ஜெட்டுக்குக் காசு ஒதுக்காம வீட்டுல இருந்தே நடிக்க ஆள் அனுப்பி வெச்சார். என்ன படம் அது?

8.    ‘கமல்’ பட டைட்டில் சினிமாவில் ரெண்டு பொண்ணுங்க நடிச்சாங்க. ரெண்டு குல்ஃபிங்க இருந்தும் சீட்ல உட்கார முடியாம ஆடியன்ஸ் துடிச்சாங்க. டைட்டிலில் நம்ம அப்பாடக்கரையும் அசிங்கப்படுத்தினாங்க. என்ன படம் பாஸ்?

விடைகள்:

1. கற்றது தமிழ், 2. மகிழ்ச்சி, 3. ரெட்டைச்சுழி, 4 அங்காடித் தெரு, 5. எங்கேயும் எப்போதும், 6. கலகலப்பு, 7. வத்திக்குச்சி, 8. சகலகலா வல்லவன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்