சுட்ட படம்

ஞானப்பழம்

‘அப்படிப்போட்டு இப்பிடிப்போட்டு அப்படிப்போட்டானாம். இப்படிப் போட்டு அப்படிப்போட்டு எப்படியோப் போட்டானாம்!’- இந்த டயலாக் அப்படியே ‘தநா.07.அல 4777’ என்ற இந்த வார சுட்ட படத்துக்குப் பொருந்தும். இந்தப் படம் ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு வந்து அங்கிருந்து தமிழில் அப்படியே காப்பி அண்ட் பேஸ்ட் பண்ணப்பட்டது.  தமிழில் 2009-ல் வந்த ‘தநா.07.அல 4777’ படம், அப்படியே 2008-ன் இந்தி ‘டாக்ஸி நம்பர் 9211’ படத்தின் தழுவல். அது 2002-ல் வெளிவந்த ‘சேஞ்சிங் லேன்ஸ்’ படத்தின் காப்பி. ஒரிஜினல் படமான ‘சேஞ்சிங் லேன்ஸ்’ படத்தின் கதை..?

நியூயார்க் நகரத்தில் கதை நடக்கிறது. டாய்லே கிப்ஸன் என்ற இன்ஷூரன்ஸ் கம்பெனியின் சேல்ஸ்மேன் போதைப்பழக்கத்திலிருந்து மீண்டுவரும் ‘ஆல்கஹாலிக் அனானிமஸ்’ஸில் கலந்துகொண்டு மெள்ள மீண்டு வருபவன். ஒருநாள் காலையில் கோர்ட்டுக்கு அவசரமாகச் செல்கிறான். பிரிந்து செல்லும் தன் மனைவியையும் குழந்தைகளையும் எப்படியாவது தன்னுடன் தக்கவைத்துக்கொள்ளும் எண்ணத்தோடு காரைச் செலுத்துகிறான். அமெரிக்க பங்குச்சந்தையின் இளம் பிசினஸ்மேன் கெனின் பானக் என்பவனின்  கார் கிப்ஸனின் கார்மீது மோதி விடுகிறது. தன் கம்பெனியின் ஒட்டுமொத்த சொத்துகளையும் காப்பாற்றித் தக்கவைத்துக்கொள்ள முக்கியமான டாக்குமென்ட்டை பானக் கோர்ட்டுக்கு எடுத்துச் செல்லும்போதுதான் இந்த விபத்து நிகழ்ந்து விடுகிறது. இருவரும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். பானக் ‘ப்ளாங்க் செக்’ கொடுத்து சமாதானம் செய்கிறான். ஆனால், சட்டப்படி இதற்கான நஷ்ட ஈடு கொடுத்தால் போதும் என வாதாடுகிறான் கிப்ஸன். இதனால் கடுப்பான பானக் எதுவுமே செய்யாமல் நடுரோட்டில் அவனை அம்போவென விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறான். தாமதமாக கோர்ட்டுக்கு வரும் கிப்ஸனின் வழக்கு அன்று முடிந்து விடுகிறது. நீதிபதி அவனைவிட்டுப் பிரிந்து செல்ல மனைவிக்கு உரிமை உள்ளதாக சட்டப்படி அறிவிக்கிறார். தன் மனைவி மற்றும் மகள் பெயரில் வீடு வாங்கிய விஷயத்தைச் சொல்ல வாய்ப்பே இல்லாமல் போய்விட்டதே என்று நொந்துகொள்கிறான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்