செஞ்சுட்டாங்க! சேட்டன்!

கேரளாவில் இது சீனியர்களைக் கலாய்க்கும் சீசன் போல. சில நாட்கள் முன்பு மோகன்லாலின் ‘புலிமுருகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வைத்து மோகன்லாலை ‘ட்ரோல்ஸ்’ எனப்படும் மீம்களை உருவாக்கி கிண்டலடித்தார்கள். ஆனால், அவரை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடுவதைப்போல கடந்த ஒரு வாரமாக மம்முட்டியைக் கலாயோ கலாய் என கலாய்த்துத் தள்ளுகின்றனர். ஒரு படத்தில் போலீஸாக நடிக்கும் மம்முட்டி சிங்கிள் போஸ்டரில் ஒரு ஜீப்பின் முன்பு கைகளைப் பின்னால் கட்டியபடி சாய்ந்து உட்கார்ந்திருக்கிறார். அவ்வளவே! ஸ்டைலான இந்த போஸையே இணைய உலகம் கையில் எடுத்துக்கொண்டு அவரை ’வெச்சு செய்யுது’. அவைதான் இவை:

சரி... தன்னை ட்ரோல் பண்ணுவதைப் பார்த்து மம்முட்டி எப்படி ரியாக்ட் செய்கிறார் தெரியுமா?

‘‘ஹாஹா... தி பவர் ஆஃப் சோஷியல் மீடியா என்பது இதுதான். ஒரு சின்ன போட்டோவை வைத்து நம் மக்கள் எப்படி எல்லாம் கிரியேட்டிவிட்டியைக் காட்டுகிறார்கள் பாருங்கள். உண்மையில் இதற்காகப் பெருமைப்படுகிறேன். நடிகன் என்பவன் மற்றவர்களை மகிழ்விப்பவன். படத்தின் மூலம் மகிழ்விப்பது போதாது என இப்போது என் போட்டோவையும்கூட வைத்து சந்தோஷமாக இருக்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே’’ என்கிறார்.

அவர் அப்படிச் சொன்னாலும் ‘மோகன்லாலின் ரசிகர்களும் ப்ருத்விராஜின் ரசிகர்களும்தான் இப்படி மீம்ஸில் ட்ரோல் பண்ணுகிறார்கள்’ எனப் புகார் வாசிக்கிறார்கள் மம்முட்டியின் மகன் துல்ஹரின் ரசிகர்கள்.

ஆத்தி கேங் வார் ஸ்டார்ட் ஆகுதே!

- ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick