ஆஃப் த ரெக்கார்டு!

ப்போதுமே ஹீரோக்களிடம் பல்க்காக தேதிகள் வாங்கி ஷூட்டிங் நடத்தும் அனேகமான இயக்குநர் சூது நடிகரிடமும் மொத்தமாகத் தேதிகள் கேட்டாராம். ‘ஒரே நேரத்தில் ரெண்டு மூணு படங்கள் நடிக்கிறதால உங்களுக்கு மட்டும் மொத்தமா தர முடியாது’ எனக் கறாராக சொல்லிவிட்டாராம் நாயகன்!

போலீஸ் இசையமைப்பாளர், டாப் மோஸ்ட் தயாரிப்பாளர், பிரமாண்ட இயக்குநர், மூன்று நாயகிகள் ஜோடியோடு, ஒரு பிரமாண்ட தெலுங்குப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார். இடையில் என்ன நடந்ததோ, அந்தப் படத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள்!

யக்குநர் நடிகரின் சமீபத்திய படம் அடைந்த தோல்வியால், இசை நடிகர் நடித்துள்ள பேர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். இதே நிறுவனம்தான் அந்தப் படத்தையும் ரிலீஸ் செய்ததால், அந்தப் படத்துக்கான நஷ்டஈட்டினைக் கொடுத்துவிட்டு ரிலீஸ் பண்ணுங்க என்கிறார்களாம் வினியோகஸ்தர்கள்!

மீபத்தில் மகனுக்காக இயக்குநர் அப்பா ஜோதிடம் பார்த்தபோது இனி எல்லாம் சுபம் என்று சொன்னாராம் ஜோசியர். அதன்படியே ஒரு படம் ரிலீஸ் ஆனது, அடுத்தடுத்த படங்களும் ரிலீஸுக்கு ரெடி. இந்த சுபயோக சுபகாலத்திலேயே மகன் திருமணத்தையும் முடித்துவிட, தீவிரமாய்ப் பெண் பார்த்து வருகிறாராம் அப்பா!

கோட் நடிகர் பாணியில் டம்மி நடிகரும் தான் நடிக்கும் படங்கள் உட்பட எந்த ஒரு விழாவுக்கும் வருவதில்லையாம். படத்தின் புரமோஷனுக்கு வரணும் எனத் தயாரிப்பாளர்கள் அழைத்தாலும் வர மறுக்கிறாராம். இதனால் அவரை ஒப்பந்தம் செய்யக் கூடாது எனத் தயாரிப்பாளர்கள் கொதிக்கிறார்களாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்