சினிமா விடுகதை!

செம பியூட்டி சமந்தாவின் சினிமாப் பட டைட்டில்கள்தான் இந்த வார சினிமா விடுகதைகளுக்கான விடைகள் பாஸ்...

1. இக்கட தேசத்துல கெஸ்ட் ரோலு, அக்கட தேசத்துல ஹீரோயினு... ரெண்டு தேசத்துலயும் வாரிசு ஹீரோக்கள் நடிச்ச படத்துல ஹீரோக்கள் படிச்சது மெக்கானிக்கல் இன்ஜினீயரிங். இன்னுமா தெரியல..?

2. ரொம்ப வருஷமா காதலைச் சொல்லாமலே திரிந்தவரின் ‘வா’ரிசு படம். ‘பட்டம்’ போல பறக்க வேண்டிய படம் பப்படமாய் ஆனதே...! ஆனாலும் சமந்தான்னா சும்மாவா? பறகக் வைப்போம் வா!

3. ரஷ்யாவுக்கும் தலைப்புக்கும் தொடர்பு இருக்கு. ஓடாத படத்துல ஓடிவரும் நதியின் பெயரும் ஒளிஞ்சிருக்கு. காதலான படத்தை சிற்பி பெயர் கொண்ட இயக்குநர் இயக்கினாரே..! என்ன படம் பாஸ்?

4. மாஸான படத்துக்கு ஹீரோ ரொம்ப ரொம்பச் சின்ன ஆளு. பிரமாண்ட இயக்குநரின் செம ஜாலி ரிவெஞ்ச் சினிமால எல்லாமே மினியேச்சர்தான்...கிராஃபிக்ஸ்தான்...கலக்கல்தான். என்ன படம் பாஸ்?

5. ராசாவின் கை பட்டா ராங்கா போகுமா? காதல் படம் ஓடலைனாலும் பாட்டும் மெட்டும் சொதப்புமா? ரொம்பவே வித்தியாசமான கூட்டணிப் படத்துல ரெண்டெழுத்து ஹீரோதான் சம்முவுக்கு ஜோடி. கண்டுபிடிங்க பாஸ்!

6. ஷார்ப்பான படத்துல கூரான வசனம். டபுள் ஹீரோ படத்துக்கும் கோலாவுக்கும் கனெக்‌ஷன் உண்டு. கம்யூனிஸத்தை சிம்பிளா சொன்ன படத்துக்கு நல்ல கலெக்‌ஷனும் உண்டு! என்ன படம் இந்தப் படம்?

7. சூப்பரோட டைட்டில்னாலும் சூப்பரா ஓடலை. வெட்டி மகன் வெற்றிமகனா மாறும் கதையுள்ள படத்துல தூக்கலா அடிச்சதே சீரியல் வாசனை. சேலையில தரிசனம் கிடைச்ச படம்னு சொன்னபிறகும் என்னதான் யோசனை?

8. தலைவியின் டபுள் தரிசனம் கிடைச்சும் மனசுல நிக்கலை. இத்தனைக்கும் சின்ஸியர் ஹீரோகூட இருந்தும் தியேட்டர்ல நிக்கலை. ‘கௌன்ட் டவுன்’ சொன்னதால தெறிச்சு ஓடினவங்கள்ல பாதிப் பேரு க்ளைமாக்ஸ் பார்க்கலை! என்ன படம்  இது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்