ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

கவல் நம்பர் ஒண்ணு: ‘உலகம் இப்போ எங்கோ போகுது’னு இளையராஜா பாடினாலும், இன்னும் ஊருக்குள்ள அரைகுயர் நோட்டை இலவசமா கொடுத்து, சமூகசேவை பண்ற பழக்கம் இருக்கு. ஸ்கூல்ல அரைகுயர் நோட்டுலதான் வீட்டுப்பாடம் எழுதணும்ங்கிற வழக்கமும் இருக்கு. தகவல் நம்பர் ரெண்டு: கம்ப்யூட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், சாட்டிங், டேட்டிங்னு வாழ்றவங்களுக்கு கையெழுத்துனா என்னனு மறந்து போயிருக்கும். கைப்பட எழுதுற பழக்கமும் போயிருக்கும். சரி, அதுக்கு என்ன பண்ணலாம்? ஆண்ட்ராய்டு வழங்கும் ‘ரைட்’ அப்ளிகேஷனை இன்ஸ்டால் பண்ணுங்க. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிங்க!

நோட்டில் எழுதுவதுபோல, கைப்பட எழுதுவதுதான் அப்ளிகேஷனின் கான்செஃப்ட். விதவிதமான பென்சில், பேனாவை வெச்சு ஒரு நோட்டில் எழுதுவீங்க. இந்த ஒரு ஆப்ல எல்லாமே அடக்கம். தலைப்புக்கு கலர் கொடுக்கலாம். முக்கியமான பாயின்டுக்கு ஹைலைட் கொடுக்கலாம். கைப்படவே எழுதலாம், கிராஃப் போடலாம், படம் வரைந்து பாகங்களைக் குறிக்கலாம். சிம்பிளா சொன்னா, நோட்டுக்குப் பதில் இந்த மொபைல் ஆப்! அப்புறமென்ன? மாசத்துக்கு ஒரு நோட்டு வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எழுதிக்கிட்டே இருக்கும்போது பேனா மை தீர்ந்துபோனா, பக்கத்தில் இருக்கிறவனைச் சுரண்டி ‘ஒரு துளி’ ஓசி வாங்குவோமே... அந்த அவமானம் இல்லை. கோடு போட்டது, கோடு போடாதது, நாலு கோடு போட்டதுனு மளிகைச் சாமான் லிஸ்ட் மாதிரி, வாத்தியார் சொல்ற வகைவகையான நோட்டுகளை வாங்கி அடுக்கணும்னு அவசியம் இல்லை. இன்னும் நிறைய ‘இல்லை’கள் இருக்கு பாஸ்! அடுத்து, கையெழுத்தே மறந்துபோன கோஷ்டிக்கு வருவோம்.

கடைசியா கைப்பட எழுதியது எப்போனு உங்களுக்கே மறந்து போயிருக்கும். அதுக்காகவே இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் பண்ணி கைப்பட எழுதிப்பார்க்கலாம். ‘சின்ன வயசுல என் கையெழுத்து குண்டு குண்டா அழகா இருக்கும்னு டீச்சர்ஸ் சொல்வாங்க. இப்போ கையெழுத்தே வரலை’னு தேம்பி அழாம, திரும்பவும் ஃபுல் ஃபார்முக்குத் திரும்பலாம். பெர்சனல் ‘டைரி’யைக்கூட டைப் பண்ணி, டாக்குமென்டா சேவ் பண்றவங்க, இனி கைப்பட டைரி எழுதலாம். அப்புறமென்ன பாஸ்? உங்க ‘முதல் நாள் முதல் கையெழுத்தை’ ஆரம்பிச்சு வைங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்