இது குரூப் டார்ச்சர்!

ரோட்டுல சும்மா போறவனுக்கு டீ வாங்கிக் கொடுத்து ஒரண்டையிழுக்கிறதோட 21-ம் நூற்றாண்டு அப்டேட்டட் வெர்ஷன்தான் வகைதொகையில்லாமல் வாட்ஸ் அப் குரூப்களில் கோர்த்துவிட்டுத் தங்களோட கொலைவெறியைத் தீர்த்துக்கிறதும். எப்படியெல்லாம் நைஸா உள்ளே இழுத்துப்போட்டு நம்மைக் கதறவிடுறாய்ங்கனு பாருங்க!

 தத்துவம்ங்கிற பேர்ல ஃபார்வர்டு மெசேஜ்களை அனுப்பி விளையாடுறதுக்கு குரூப்புகளை ஆயுதமாகப் பயன்படுத்துவாய்ங்க. அதுக்கு இப்போ ஒரு சாம்பிள் சொல்றேன் கேளுங்க. ‘பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிற்கும். ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிற்கும். சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிற்கும். ஆனா, கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிற்குமா? யோசிக்கணும்!’னு போட்டுட்டு உருண்டு புரண்டு வேற சிரிப்பாய்ங்க. யய்யாடி..!  இந்த ஒண்ணுக்கே உடம்பெல்லாம் நடுங்குதே... இப்படித் தினமும் 100 மெசேஜ்களை டீல் பண்றேன் பாஸ்.

என்ன ஏதுனுகூடப் பார்க்காம தனக்கு வந்த மெசேஜ்களை காப்பி பண்ணி இன்னொரு குரூப்புல அழுத்திப் பசை போட்டுக்கிட்டு இருப்பாய்ங்க. ராக்கெட்ல ஏறி சூரியனுக்குப் பக்கத்துல போனா, அது ‘ஓம் ஓம்’னு சவுண்டு விடுதுனு ஒருத்தன், ஈஸ்ட் இண்டியா கம்பெனி, சிவன் பார்வதி படம் போட்டு நாணயம் போட்டாங்கனு ஒருத்தன், அங்கே இங்கே படிச்சதெல்லாம் காந்தி சொன்னாரு, விவேகானந்தர் சொன்னாருனு அவங்க மேல மூட்டை கட்டி இன்னொருத்தன். இவனுககூட இருக்கிறது சுடுகாட்டுல இருக்கிற மாதிரியே ஃபீல் ஆகும்.

 ஒரு குறிப்பிட்ட மெசேஜை பத்து குரூப்புக்கு ஃபார்வர்டு பண்ணலைனா விடியறதுக்குள்ள ஒரு கெட்ட செய்தி வரும்னு பீதியைக் கிளப்புவாய்ங்க பாருங்க. எப்பேர்ப்பட்ட பகுத்தறிவுப் புலிகளா இருந்தாலும் ஒரு நிமிஷம் ஈரக்குலை நடுங்கிடும்.  

இன்னொரு குரூப்புல ஒரு டைப்பான பக்கிகளா இருக்கும். குரூப் பெயரையே ஒரு நாளைக்கு 40 தடவை மாற்றி மாற்றி விளையாடிக்கிட்டு இருப்பாய்ங்க. திடீர்னு ஒருத்தன் குரூப்புல இருக்கிற எல்லாரையும் ரிமூவ் பண்ணுவான். திரும்பவும் 120 பேரைச் சேர்த்துவிட்டுக் கதறவிடுவாய்ங்க. உங்க ஆட்டத்துல இது புது ரகமால்ல இருக்கு?

 யாராச்சும் நமக்கு ரொம்ப வேண்டிய ஒருத்தன் அடல்ட்ஸ் ஒன்லி குரூப்புல சேர்த்து விடுவான். நுழைஞ்சதும் நம்மை வரவேற்க வரிசையா பத்து போட்டோக்களையும் போட்டு, லெஃப்ட் ஆக முடியாமக் கைகளைக் கட்டிப்போட்டுக் கையறு நிலைக்குத் தள்ளிடுவாய்ங்க.

- விக்கி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick