சினிமால்!

யக்குநராக இரண்டு படம் எடுப்பதற்குள்ளேயே இரண்டு படங்களைத் தயாரிக்கும் நிலைக்கு வந்து விட்டார் அட்லி. ஏற்கெனவே ஜீவாவை வைத்து ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தைத் தயாரித்து வரும் அட்லி, நிவின் பாலியிடமும் கால்ஷீட் வாங்கி அவரை வைத்து தமிழ், மலையாளத்தில் இன்னொரு படத்தைத் தயாரிக்கிறாராம். அட்லியே இயக்கினால் நல்லா இருக்கும் என நிவின் தன் ஆசையை வெளிப்படுத்த, அடுத்து ஒரு மாஸ் ஹீரோ படத்தை இயக்கப் போறேன்னு சொல்லிவிட்டாராம். நல்ல கதையோடு இருக்கும் புது இயக்குநரைத் தேடி வருகிறார்களாம். ‘தெறி’ மாஸா இருக்கணும்!

‘இறைவி’ படத்தில் நல்ல நடிகனாகப் பெயர் வாங்கிய சந்தோஷத்தோடு பவன் கல்யாணை வைத்து, தான் இயக்க இருக்கும் படத்தில் தீவிரமாக உழைக்க ஆரம்பித்துவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. ‘குஷி’ படத்தைப் போலவே இரண்டு வெவ்வேறு குணங்கள் கொண்ட ஒரு காதல் கதையை, ஆக்‌ஷன் கலந்து இயக்க இருக்கிறாராம். ஸ்ருதிஹாசன், பவன் கல்யாணின் ஜோடியாம். அதே படத்தை விஜய்யை வைத்து தமிழில் இயக்குவீர்களா? எனக் கேட்டால் அவர் வேற ரேஞ்ச், அதனால் ரீமேக்ல நானே நடிப்பேன் என்கிறாராம். குஷி 2!

லெட்சுமி ராமகிருஷ்ணன் என்றாலே எப்போதும் சர்ச்சைதான். தற்போது லேட்டஸ்டாக ‘இறைவி’ படத்தின் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஏற்கெனவே ‘இறைவி’ படத்தைப் பற்றி பல சர்ச்சையான விவாதங்கள் போய்க்கொண்டிருக்கும் வேளையில், இதுதான் பெண்களைப் பற்றிய படமா? பெண்களைப் பற்றிய அழுத்தமான விஷயம் எதுவும் படத்தில் இல்லை. மாறாக வன்முறை மற்றும் கொடூரமான திருப்பங்கள்தான் இருக்கின்றன. கேமரா மற்றும் இசை இருந்தால் மட்டும் போதாது என்று கடுமையாகப் படத்தை சாடி இருக்கிறார். எரியற தீயில் எண்ணெய் ஊத்துறீங்களே மேடம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்