சுட்ட படம்

ந்த வார சுட்ட படம் 1993-ல் மணிரத்னம்-ஏ.ஆர்.ரஹ்மான்- பிசி.ஸ்ரீ ராம் காம்போவில் ரிலீஸான ‘திருடா திருடா’. இந்தப் படம் 1969-ல் ரிலீஸான ஹாலிவுட் படமான ‘பட்ச் கேசிடி அண்ட் தி சன்டேன்ஸ் கிட்’ என்ற படத்தின் தழுவல். ‘தி ஸ்டிங்’ படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது வென்ற ஜார்ஜ் ராய் ஹில் இயக்கத்தில் ரிலீஸான இந்தப் படம் அமெரிக்காவின் சிறந்த 100 படங்களில் 49-வது இடத்தைப் பிடித்த எவர்க்ரீன் க்ளாஸிகல் படம்.

கதை 1890-ல் நடக்கிறது. பட்ச் கேசிடி அந்த ஜில்லாவிலேயே பெரிய திருட்டுக் கும்பலின் தலைவன். அவனது கும்பலுக்கு ‘ஹோல் இன் தி வால் கேங்’ என்றுதான் பெயரே. எவ்வளவு பெரிய சுவராக இருந்தாலும் ஓட்டையைப் போட்டு ஆட்டையைப் போடும் கேடி கும்பல் அது. அந்தக் குழுவில் ஒருவனும் கேசிடியின் நண்பனுமான ‘டெட் ஷாட்’ சன்டேன்ஸ் கிட், துப்பாக்கியால் குறிபார்த்து சுடுவதில் செம கில்லாடி. இவர்கள் ஒரு திருட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டு தங்கள் இருப்பிடத்துக்குத் திரும்பும் முன் அந்தக் குழுவில் இருக்கும் ஹார்வி லோகன் என்பவன் கேசிடிக்குப் பதில் தலைவனாகத் தன்னைத் தானே அறிவித்துக்கொள்கிறான். கேசிடியோ டென்ஷனாகிறான். ஆனால், தன்னுடன் கத்திச் சண்டை போட்டு தன்னை ஜெயித்து மீண்டும் தலைவனாகிக்கொள் எனச் சொல்கிறான் ஹார்வி. சண்டையில் ஜெயித்தாலும் ஹார்வியை மன்னித்து ஹார்வி சொல்லும் ரயிலைக் கொள்ளை அடிக்கும் திட்டத்துக்கு ஓகே சொல்கிறான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்