ஆஃப் த ரெக்கார்டு!

பாடகி நடிகை இசையமைத்துப் பாடி, சொந்த செலவில் ஓர் இசை ஆல்பத்தை உருவாக்கினாராம். அதை வெளியிடச் சொல்லி ஒவ்வொரு மியூஸிக் கம்பெனியாக ஏறி இறங்கியும் யாரும் வெளியிட முன்வரவில்லையாம். அந்த நஷ்டத்தை சரிக்கட்ட, வரும் பட வாய்ப்புகளையெல்லாம் ஏற்றுக்கொள்கிறாராம் நடிகை!

மகன் படத்தை ரிலீஸ் செய்தே நிறையப் பணத்தை இழந்த அப்பா இயக்குநர் கஷ்டத்தில் இருக்கிறாராம். இதனால் காமெடி ரோல் என்றாலும் பரவாயில்லை எனச் சொல்லி வரும் பட வாய்ப்புகளை ஒப்புக்கொள்கிறாராம்!

அப்பள நடிகை போட்கிளப்பில் பங்களா, கார் என சொகுசாக வாழ்ந்து வருகிறாராம். பி.ஆர்.ஓ., மேனேஜர் என யாரையும் வைத்துக்கொள்ளாததாலும், சரியான போன் நம்பர் இல்லாததாலும் அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தவிக்கிறார்களாம். இதனால் அந்தப் பட வாய்ப்புகள் வேறு சில நாயகிகளைத் தேடிப் போகிறதாம்!

மாயமாய் அறிமுகமாகி சீக்கிரமே முன்னணிக்கு வந்துவிட்ட நடிகை ரொம்பவே மாறிவிட்டாராம். ஒரு தெலுங்குப் படத்தில் மிச்சமிருக்கும் ஓரிரு நாட்கள் நடித்துக் கொடுத்தால், படத்தை ரிலீஸ் செய்து விடுவோம் எனப் படக்குழுவினர் கேட்க, பன்ச் நடிகர் படத்தை முடித்து விட்டுதான் வருவேன் எனக் கறாராகக் கூறிவிட்டாராம்!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்