கதை விடுறாங்க!

ல நாட்கள் கழித்து ஃபேஸ்புக் சென்ற ராஜா, ஃபேஸ்புக்கை லாக்-இன் செய்ததும்...

- இந்த வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய கதைகள் இதோ...!

ராஜா: நோட்டிஃபிகேஷன் நிறைய இருக்கும் என நினைத்த ராஜா, வெறும் ஜந்தே நோட்டிஃபிகேஷன்ஸைப் பார்த்ததும் அதிர்ந்துபோனான். அந்த ஐந்தும் கேண்டி கிரஷ் ரெக்வெஸ்ட். ஒரு நிமிடம் வெறுப்பான ராஜா தன் அக்கவுன்டை லாக் அவுட் செய்துவிட்டு பெண் பெயரில் புது ஃபேக் ஐடி துவங்க ஆயத்தமானான்.

சந்தோஷ்: அவனுக்கு ஒரு பொண்ணுகிட்ட இருந்து மெசேஜ் வந்திருந்தது. அவனும் ரிப்ளை பண்ணினான். அப்படியே கொஞ்சநாள் பேசிப் பழகி லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருந்தாங்க. பாவம் அவனாச்சும் நல்லா இருக்கட்டுமே...

இளந்தமிழ்: அவனது நெட்பேக் முடிந்துவிட்டதாக மெசேஜ் வந்தது. போங்கடா நீங்களும் உங்க நெட்டும் என கடுப்பாகி லாக் அவுட் செய்ய, பேட்டரி லோ எனத் திரையில் காட்ட கடுப்புடன் போனைத் தன் பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு சென்றான்.

குரு: ஒரு வருடத்திற்கு முன் தூக்குப்போட்டு இறந்த நண்பனிடம் இருந்து மச்சி ரெடியா என்று வந்திருந்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியாகி பயத்தில் பதறியடித்து லாக் அவுட் செய்தான்.

பட்டமுருகன்: தல-தளபதி சண்டை உக்ரமாக நடந்து கொண்டிருந்தது. இவங்க இன்னும் திருந்தவே இல்லை என்று புலம்பிவிட்டு ஒரு ஃபேக் ஐடியின் இன்பாக்சில் ஹாய் என மெசேஜ் செய்து ரிப்ளைக்காகக் காத்துக்கொண்டிருந்தான்.

மாரிஷ்: எதிரி நாட்டு மன்னர் போர் ரெக்வஸ்ட் கொடுத்திருந்ததைப் பார்த்து மட்டையானார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்