இன்னும் என்னய்யா தூக்கம்?

ந்தியாவில் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டுத் திரும்பச் செலுத்தாதவர்கள் நிம்மதியாகத் தூங்க முடியாது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சொன்னதைக் கேட்டு லண்டனில் இருக்கும் மல்லையா உருண்டு புரண்டு சிரித்தது டெல்லிக்கே கேட்டிருக்கும். அருண் ஜெட்லிக்கு கொஞ்சம் ஐடியாக்கள்...

லோன் வாங்கியவர்கள் வீட்டில் அசந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது காலிங்பெல்லை அழுத்திவிட்டு ஓடிப்போய்விட ஆட்களை நியமிக்க வேண்டும்.

கடன் வாங்கியவர்கள் நிம்மதியாகத் தூங்க முடியாதபடி அவர்களது வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும் ஃபேன், ஏ/சி போன்றவகளை ரிப்பேர் செய்துவிட வேண்டும். முடியலைனா, கரன்ட்டையே மொத்தமாகப் பிடுங்கி விடலாம். (இது குறித்த மேலும் ஆலோசனைகளுக்கு ஆற்காடு வீராசாமியை அணுகவும்)

வாட்ஸ்-அப்பில் மொட்டை ராஜேந்திரன் கர்ண கொடூரமாகச் சிரிக்கும் டப்ஸ்மாஷ் வீடியோக்களை அனுப்பி டார்ச்சர் செய்ய வேண்டும்.

அவ்வப்போது ஏரியாவில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தியைக் கிளப்பிக்கொண்டே இருக்க வேண்டும். நம்ம ஆட்கள் விடிய விடியத் தூங்காமல் சம்மணம் போட்டு உட்கார்ந்திருப்பார்கள்.

அப்பார்ட்மென்ட்களில் திருடன் வந்துவிட்டதாகத் திட்டமிட்டு பீதியைக் கிளப்பிவிட வேண்டும். இது பக்கத்து வீட்டுக்காரன் தூங்கக் கூடாதெனப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கண்டுபிடித்த சூத்திரம். 

இந்தியாவில் பேய்ப்படங்களுக்கு வரிவிலக்கு வழங்கி அத்தகைய படங்களின் தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும். எல்லா இயக்குநர்களும் பயமுறுத்தியே மக்களின் ராத்தூக்கம் கெட்டுவிடும்.

கார்ப்பரேஷன் தண்ணீரில் குளோரினோடு கொஞ்சம் பேதி மாத்திரையைப் பொடியாக்கிக் கலந்துவிட வேண்டும். பிறகென்ன, அந்த ஆள் விடியும்வரை பாத்ரூம் பக்கத்திலேயே பாயைப் போட வேண்டியதுதான். (இது தமிழ் சினிமாவில் சுட்டது)

இதுமாதிரி முற்போக்குத் திட்டங்களை அறிவித்தால், மக்கள் மிரண்டுபோய் அடுத்தநாளே வட்டியையும் அசலையும் அடைத்துவிடுவார்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்