கட்டையால் அடி!

ங்கர், மணிரத்னம், கௌதம் மேனன் படங்களின் க்ளிஷேக்கள் பார்த்தாச்சு, ஒரு சேஞ்சுக்கு சுந்தர்.சி படங்களில் வரும் க்ளிஷேக்களை ஒரு ரவுண்டு பார்ப்போமே...

எப்படி அடுப்பங்கரையில் கண்டிப்பா அடுப்பு இருக்குமோ, அது மாதிரி சுந்தர்.சி படங்களில் கண்டிப்பா இடுப்பு இருக்கும். ஹீரோயின்களின் இடுப்பைக் காட்டாத சுந்தர்.சி படங்கள் திரையிலேயே இல்லையாம்.

எப்படியும் குளுகுளு கடற்கரையில் படமாக்கப்பட்ட ஒரு கிளுகிளு பாடல் கண்டிப்பாக படத்தில் இடம் பெற்றிருக்கும். தண்ணீரில் அலசப்படும் அழுக்குத் துணிபோல் ஹீரோயின் கடலுக்குள் முங்கி முங்கி எழுந்துகொண்டிருப்பார்.

எப்படியும் கல்யாண வீடு காட்சி ஒன்று வந்துவிடும். அதிலும், கல்யாண வீட்டில் கலவரம் செய்ய சாம்பாரில் கல் இருப்பதாகச் சொல்லி முழு செங்கல்லை எடுத்துக் காட்டுவார்கள்.

சுந்தர்.சி படத்தில் வரும் காமெடியன்கள் கொடுவா மீசை, அருவா கிருதா என டெரராகவே மூஞ்சியை வைத்துக்கொண்டு ஹீரோவுக்குப் போட்டியாக ஹீரோயினை டாவ் அடித்துக்கொண்டிருப்பார்கள். பாவத்த...

உருட்டுக்கட்டையில் அடித்தால் உடனே மயக்கம் ஆகிவிடுவோம் என்ற அறிவியல் கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர் சுந்தர்.சி தான். இவர் படங்களில் கடப்பாரை வைத்தே அடித்தாலும் மயக்கம்தான் வரும், ரத்தம் வராது. என்னாச்சு?

கதைக்களம் பெரும்பாலும் பொள்ளாச்சியாகத்தான் இருக்கும். தென்னந்தோப்பிற்குள் தொடை தெரிவது போல் அல்ட்ரா மாடர்ன் உடை அணிந்துகொண்டு ஹீரோயின் சுற்றிக்கொண்டிருப்பார்.

சுந்தர்.சி படங்களின் க்ளைமாக்ஸ் சீக்கிரம் முடியவே முடியாது. கடைசிக் கால்மணி நேரம் சேஸிங், ரேஸிங் என பல சம்பவங்கள் நடந்து முடிந்த பிறகுதான், நடிகர்கள் வணக்கம் சொல்வார்கள்.

சுந்தர்.சி படங்களில் இருக்கும் மிகப்பெரிய க்ளிஷே விச்சு விஸ்வநாத் தான். அதுதான் ‘உனக்காக எல்லாம் உனக்காக’ படத்தில் அலிபாபா கேரக்டரில் நடித்திருப்பாரே அவரேதான். சுந்தர்.சி படங்களில் மட்டும் ஆப்ஸென்டே ஆக மாட்டார். அதே போல், ஹன்சிகா மோத்வானியும் தற்போது பொம்பளை விச்சு விஸ்வநாத்தாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறார்!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick