அவசரமா சில ஆப்ஷன்ஸ்!

நாம வண்டியில் போகும்போது நமக்கு கால் பண்றவங்களுக்கு நாம வண்டியில்தான் போயிட்டு இருக்கிறோம்ங்கிறதை காட்டுற ஆப்ஷன்ஸ் வந்திடுச்சாம். அப்படியே இதுகளையும் வெச்சுட்டா புண்ணியமாகப் போகும் மக்கழே...

நம்மளே பத்து ரூபா கார்டு வாங்கி ரீசார்ஜ் பண்ணி அதுலேயும் பாதியைப் பேசி முடிச்சுட்டு ரெண்டு ரூபாதான் பேலன்ஸ் வெச்சுருக்கிறோம்கிறதை 13 மிஸ்டுகால் கொடுத்துட்டு நாம கால் பண்ணுவோம்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிறவங்ககிட்ட அதைத் தெரியப் படுத்துற மாதிரி ஆப்ஷன்ஸ் வெச்சா எம்புட்டு நல்லா இருக்கும்!

தஞ்சாவூரில் இடம் வாங்க லோன் வேணுமா, தரமணியில் ஃப்ளாட் வாங்க லோன் வேணுமானு கேட்டு கால் பண்ணி டார்ச்சர் பண்றதுக்கு முன்னாடியே அந்த கம்பெனிகாரங்ககிட்ட நாம டாக்கிங் அமெளன்டையே போன் கம்பனிகாரங்ககிட்ட லோன் வாங்கித்தான் பேசிட்டு இருக்கோம்னு சொன்னா, எவ்வளவு சந்தோசம்!

வாட்ஸ் அப்புல நம்ம நம்பர் இருக்குங்கிற ஒரே காரணத்தினால் சம்பந்தமில்லாமல் கண்ட குரூப்புலேயும் கோர்த்துவிடுறவங்ககிட்ட ‘அல்ரெடி டயர்டாகித்தான்டா இருக்கிறோம்’, ‘வேணாம்டா எங்களை விட்ருங்கடா’னு கதறி அழுது கையெடுத்துக் கும்பிடுறதை யாராவது அட்வான்ஸாக அவங்ககிட்ட  சொல்லுகிற மாதிரி ஆப்ஷன் வெச்சா கோடானு கோடி நன்றி ஏசப்பா!

நீங்கள் டயல் செய்யும் நபருக்கும் குழந்தை குட்டி இருக்கு, அவருக்கும் வேலை வெட்டியெல்லாம் இருக்கு, தயவுசெஞ்சு சும்மா சும்மா கால் பண்ணிக் கடுப்பைக் கிளப்பாதீங்கனு சொல்ற மாதிரி ஒரு மொபைல் மோடு அர்ஜென்டா தேவைப்படுதுனு கண்ணு வேர்த்துக் கலங்கிய பல பேர் சார்பாகக் கேட்டுக்கிறேன்.

ஃபேன்ஸி நம்பர் வெச்சுருக்கிறதால நம்மளை எந்த நேரமும் பில்டப்போடவே பார்க்கிறவங்ககிட்ட ‘20 ரூபாய்க்கு ரெண்டு சிம்னு வாங்கும்போது யதார்த்தமா ஏதோ லக்குல கிடைச்ச நம்பர்தான்டா’னு சொல்லிப் புரியவைக்க ஒரு கண்டுபிடிப்பைக் கண்டுபிடிச்சா, ஐ யம் வெரி வெரி ஹேப்பி யூ நோ...  மிடியலை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்