சினிமா விடுகதை!

லாலா கடை ஸ்வீட் போல பெயரிலேயே இனிக்கும் காஜல் அகர்வால் நடித்த படங்கள்தான் இந்த வார சினிமா விடுகதைக்கான விடைகள் பாஸ்..!

1. சூப்பர் ஸ்டார் டைட்டில் படத்துல உயரமான போலீஸ் ஹீரோ, தமிழ் சினிமாவின் ரொம்ப நல்லவரைக் கெட்டவரா காட்டிய படத்துல யார் இந்த முயல் குட்டி?

2. இதுவும் ரஜினி சினிமா டைட்டில்தான். தம்பி நடிகரின் ஆக்‌ஷன் சினிமா. பரோட்டா நடிகரும் இயக்குநரும் இணைஞ்ச படத்துல குட்டிப்பசங்கதான் வில்லன்ஸ்!

3. டபுள் ஹீரோ சினிமாவுக்கு இனிஷியல் டைரக்டர் இயக்கம். சூப்பர் ஃபிகரா காஜல் இருந்தும் சூரமொக்கையா ஆனதே படமும், நான்கெழுத்து ‘மாற்று’ சினிமா ஏமாற்றியதே! என்ன படம் இது?

4. பஞ்சாமிர்தமென்றாலும் ஞாபகம் வரும். பன்ச் பேசும் மூன்றெழுத்து ஹீரோன்னாலும் ஞாபகம் வரும். ஊரரசு இயக்கிய படத்துல குட்டி நடிகர்தான் ஹீரோ. காஜல் நடிப்பில் ரிலீஸான முதல் தமிழ்ப் படம் பாஸ் இது!

5. தீபாவளின்னதும் ஞாபகம் வருமே...தீவிரவாதினு சொன்னாலும் ஞாபகம் வருமே! 187 கோடி கலெக்‌ஷன் சினிமா டைரக்டருக்கு இந்தியிலும் மவுசு உண்டு பாஸ்! என்ன படம்?

6. பாடகி சித்ரா தேவி ப்ரியாவை மறக்க முடியுமா? காமெடித் திருவிழானு கேப்ஷனோட வந்த படம் பப்படமான கதை நம் எல்லோருக்குமே தெரியும். டாஸ்மாக் டைரக்டருக்கு நேரம் சரி இல்லாமல் போன படம், என்ன படம் பாஸ்?

7. தலைக்கு பில்லா. தளபதிக்கு என்ன? சிவனும் சக்தியும் சேர்ந்த சினிமா. கரெக்டா சொன்னா எப்போ மாமா ட்ரீட்டுனு மட்டும் கேட்கக் கூடாது!

8.
இது வேற மாறி சினிமா. தர லோக்கல் ஹீரோவுக்கு புது மாதிரி போலீஸ் வேஷம் போட்ட வில்லனுக்கு ஒரு மாதிரி. மொத்தத்துல படமே சுமார் மாதிரி!

விடைகள்:

1. பாயும்புலி 2. நான் மகான் அல்ல 3. மாற்றான் 4. பழனி 5. துப்பாக்கி 6. ஆல் இன் ஆல் அழகுராஜா 7. ஜில்லா 8. மாரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்