அப்படியே மாறிட்டாங்க!

விதம்விதமா ஹேர் ஸ்டைல் வெச்சுக்கிறதே ஸ்போர்ட்ஸ்மேன்களின் பொழுதுபோக்குதான். கிரிக்கெட்டும் விதிவிலக்கு இல்லை. ஹேர்  ஸ்டைல் மாறியதற்குப் பிறகு சிலரோட எஸ்டிடி-யே மாறி இருக்கு. அப்படி  மாறிய சிலர்...

மஹேந்திர சிங்க் தோனி:

தோனின்னாலே அவரோட நீண்ட ஹேர்ஸ்டைல்தான் ஞாபகத்துக்கு வரும். தன் நீளமான ஹேர்ஸ்டைலைத் தனித்துவமாக கவனிக்க வைத்ததும் அதன் மூலம் துவக்க காலங்களில் ஸ்டாண்டர்டு ஆகி முதல் டி20 போட்டியை வெல்லக் காரணமாகவும் இருந்தது என்றாலும் அதன் பின்னர் டோட்டலாக சேஞ்ச் ஆகி ஷார்ட் ஹேருக்கு மாறிய பின்னர்தான் டி20, ஒருநாள் போட்டி, அசைக்க முடியாத  சென்னை சூப்பர் கிங்ஸ், இப்போது வரை தோனியின் ஹைலைட்டான டெஸ்ட் போட்டிகளின் தரவரிசையில் இந்தியாவை நம்பர் ஒன் ஆக்கியது போன்ற டாப் சாதனைகள் எல்லாம் அரங்கேறியது கவனிக்கத்தக்கது. 2011 உலகக்கோப்பையின் ஃபைனலில் வின்னிங் ஷாட் அடிக்கும்போது நீண்ட கூந்தலை வைத்திருந்தவர் அதை வென்று கையில் வாங்க வரும் அந்த கேப்புக்குள் டோட்டலாக முடியையே எடுத்துவிட்டு வந்ததும், தன் நீண்ட கூந்தலை வெட்டிக்கொண்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது அதை நேரம் வரும்போது சொல்கிறேன் என்றதும் நிஜமாகவே இந்த மேட்டருக்கு மேலும் வலு சேர்க்கும்படி இருக்கிறது.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்:

ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தவர். மார்ட்டின், மைக்கேல் பேவன் என தன் சகாக்களுடன் பதினொன்றில் ஒருவராக இருந்து வந்தவர் ஆபீஸ் போகும் பையன் போல் அடக்க ஒடுக்கமாக இருந்த தன்னுடைய ஹேர்ஸ்டைலை தன் பூர்வீகமான வெஸ்ட் இண்டியன்ஸ் ஹேர் ஸ்டைலுக்கே மாற்றிய நேரம் இவரது கிரிக்கெட் வாழ்வே மாறிப்போனது. தடுப்பாட்டம் ஆடிக்கொண்டிருந்த இவர் அதிரடி பேட்டிங்கில் கணிசமாய் விக்கெட் வீழ்த்தக்கூடிய பகுதி நேரப் பந்து வீச்சாளர் என ஐபிஎல்-களில் ஆளே மாறிப்போனார்.

லசித் மலிங்கா:

சமிந்தா வாஸுக்கு அப்புறம் இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர்னு யாரும் சோபிக்காத நேரத்துல டீமுக்கு வந்தவர். இவரும் பெருசா ஏதும் சாதிக்கலைதான். ஆனா சுருள் சுருளாக இவர் ஹேர் ஸ்டைலை சேஞ்ச் பண்ணின நேரம் இப்போது ஐபிஎல்-லில் பேட்ஸ்மேன்களின் கண்களில் தன் துல்லியமான யார்க்கர் பந்துகளால் ரத்தக்கண்ணீர் வர வைத்துக்கொண்டிருப்பவர். மலிங்கா யார்க்கர் என்றும் மலிங்கா ஹேர் ஸ்டைல் என்றும் ஒரு தனி ஸ்டைல் உருவாகும் அளவுக்கு அதிரி புதிரி ஃபேமஸ் இந்த மலிங்கா. அணியில் கண்டும் காணாதவராக இருந்த இவர் தற்போது ஐபிஎல் களில் ஏலம் எடுப்பவர்களின் மோஸ்ட் வான்டட் பெளலர்.

திலக ரத்ன தில்சான்:

இலங்கை அணியின் லெவனில், பெளலரா மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனா என  நமக்கும், ஏன் அவருக்குமே தெரியாத ஓர் இடத்தில் ஆடிக்கொண்டிருந்தார். திடீரென தாடியில் கோடுகளை வரைந்துகொண்டு வலம் வர ஆரம்பித்தவர், ஷேவாக்கின் டெல்லி டீமில் பெற்ற அனுபவம், டி20 போட்டிகள் எனக்  கை கொடுக்க இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் என்ற பெயர்களுக்குச் சொந்தக்காரர் ஆனார். தில்சான் போலவே சில யூத்துகள் தாடி வைத்துக்கொண்டு திரிவது தனிக்கதை.

கிறிஸ் கெயில்:

சொல்லவே வேண்டாம். வெஸ்ட் இண்டீஸின் தொடக்க ஆட்டக்காரராக சமத்துப்பிள்ளைக்குரிய ஹேர்ஸ்டைலுடன் ஓரளவு நன்றாகவே விளையாடிக்கொண்டிருந்தாலும் ‘என்னமோ ஏதோ’ என்றே கவனிக்கப்பட்டு டீமிலும், உலக கிரிக்கெட்டிலும் இருந்து வந்தவர், கம்பி போன்ற பரட்டைத்தலையுடன் களம் குதித்த பின் ஆடிய, ஆடிக்கொண்டிருக்கும் ருத்ர தாண்டவங்களைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ப்ப்பா என்னா அடி.

ஹ்ம்ம்ம்... ஹேர் ஸ்டைல் சேஞ்ச் பண்ணி காணாமல் போன வீரர்களும் இருக்காங்க அவங்களைப் பற்றி இன்னொரு எபிஸோடுல பார்ப்போம். ஹிஹி!

-ஜெ.வி.பிரவீன்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick